Sithanaikutty Swamigal
Sithanaikutty Swamigal

சித்தானைக்குட்டி சுவாமிகளின் வரலாறு

சித்தானைக்குட்டி சுவாமிகள்(Sithanaikutty Swamigal), இந்தியாவின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சிற்றரசரின் மகனாவார். இவரது இளமைப் பெயர் கோவிந்தசாமி ஆகும். அவருடைய இளமைக்காலத்தில் நாட்டு மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இந் நோயால் மக்கள் பலர் உயிரிழந்தனர். இக்கால கட்டத்தில் இரு மகான்கள் நோயினை தாமே ஏற்று பணியாற்றினார்.

இந்தச் செயலை அறிந்த சிற்றரசர், மகான்களை அழைத்து உபசாரம் செய்ய எண்ணம் கொண்டு, தனது மகனிடம் மகான்களை அழைத்து வருமாறு கூறினார். தந்தையின் கட்டளையின்படி கோவிந்தசாமி அவர்கள் மகான்களை தேடி, கடைசியாக ஒரு குடிசையில் அவர்களைச் சந்தித்தார். மகான்கள் அவரை அன்புடன் அணைத்து ஆசீர்வதித்தனர். கோவிந்தசாமி அவர்கள் துறவறத்தினை நாடியதால், மகான்களுடன் இணைந்து நோயுற்ற மக்களுக்கு உதவ தொடங்கினார். தூத்துக்குடி வழியாக ஈழம் செல்ல நினைத்த போது, கப்பலுக்கான சீட்டுகள் இருவருக்கு மட்டுமே கிடைத்தன.

1920ல் இருந்து சுவாமிகள் ஈழத்தின் பல பகுதிகளில் நடந்து சென்று பித்தனாக, பேயனாக, கேலி பண்ணுவதற்குரியவராகவும் தன்னை வெளிக்காட்டினர். ஆனால், உண்மையில் அவருடைய செயல்கள் அனைத்தும் மக்களது மனோநிலைக்கேற்ப அருள் வழங்கும் ஒரு சித்தவிளையாட்டாகவே அமைந்தது.

காரைதீவில் சித்தானைக்குட்டி சுவாமிகள் தங்கியிருந்த ஆச்சிரமம் பல பக்தர்களை ஈர்த்தது. மக்கள் உணவுப் பொருட்கள், காணிக்கைகள் ஆகியவற்றை வழங்க, அவை எல்லாவற்றையும் அனைவருக்கும் பகிர்ந்து அருள் வழங்கினார்.

சுவாமி அவர்களின் வாழ்நாளில் நிகழ்ந்த சில சித்துக்கள்:

  • கதிர்காமத்தில் முருகப்பெருமானால் அமிர்தத்துளி கிடைத்தது.
  • சாண்டோ சங்கரதாஸ் என்பவரை புகழ்பெற்ற வீரராக மாற்றியது.
  • கடலின் மேலே நடந்து காட்டியமை.
  • கதிர்காமத்தில் தீப்பற்றிய திரைச்சீலையை அணைத்தமை.
  • தன் உள்ளங்கையில் திருவிழாக் காட்சியை காண்பித்தமை.
  • நஞ்சு கொடுத்தாலும், தீயில் எரித்தாலும் மீண்டும் எழுந்து சித்தாடிய அதிசயம்.

சமாதி மற்றும் தொடர்ந்து நிகழும் அருள்கள்


1951ஆம் ஆண்டு ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திரம் அன்று சுவாமிகள் சமாதி அடைந்தார். அவர் முன்பே கூறியதுபோல, மூன்றாம் நாள் அவரது வயிற்றிலிருந்து இரத்தம் பெருகியது. இதனை அடிப்படையாகக் கொண்டு நான்காம் நாள் பக்தர்கள் ஆராதனையுடன் அவரை சமாதி செய்தனர். பொது மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிருவாக சபையினரால் சமாதி ஆலயம் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

1985, 1987, 1990 காலத்தில் நிகழ்ந்த வன்முறைகளால் ஆலயம் சேதமடைந்தது. 2004ம் ஆண்டு சுனாமியால் மேலும் சேதம் ஏற்பட்டது. தற்போது, பொதுமக்கள் பங்களிப்புடனும், இந்து கலாசார அமைச்சின் உதவியுடனும் ஆலயம் புணரமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்
ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்கள் சுவாதி நட்சத்திரம் அன்று சுவாமிகளின் குருபூசை, அன்னதானம், மற்றும் சமூக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. உள்ளூர், வெளிநாட்டு பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர். மேலும் அறநெறி வகுப்புகள், வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப்பிரார்த்தனைகள், மற்றும் விசேட தினங்களில் பஜனை நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

History of Sithanaikutty Swamigal

Sithanaikutty Swamigal was the son of a minor ruler in Ramanathapuram, India. His childhood name was Govindasamy. During his early years, a contagious disease severely affected the people of the region, resulting in the deaths of many.

At that time, two great saints selflessly absorbed the disease and served the people to help them recover. When the local ruler came to know about their sacrifice, he wanted to honor the saints. He instructed his son, Govindasamy, to go and invite them.

Following his father’s command, Govindasamy searched for the saints and finally found them in a small hut. The saints embraced him with love and blessed him. Deeply moved, Govindasamy chose the path of renunciation and joined the saints in serving the sick.

While planning to travel to Eelam (Sri Lanka) via Thoothukudi, they were able to get ship tickets for only two people. Hence, Govindasamy stayed behind, marking the beginning of his own spiritual journey.

Starting from 1920, Swamigal traveled across various parts of Sri Lanka, often appearing outwardly as a madman, a possessed person, or a mockery to society. However, his actions were actually divine plays (Siddha Vilayattu) intended to bless people according to their state of mind and spiritual needs.

His ashram in Karaitivu attracted many devotees. People brought food and offerings, all of which he distributed equally, blessing everyone without discrimination.

Miracles of Swamigal During His Lifetime:

  • He received drops of divine nectar (Amirtha Thuli) from Lord Murugan at Kataragama.
  • He transformed Sando Sankaradas into a renowned warrior.
  • He walked on water.
  • He extinguished a burning silk cloth at Kataragama.
  • He showed a temple festival scene in the palm of his hand.
  • He rose unharmed even after being poisoned and burned, demonstrating the power of spiritual transcendence.

Samadhi and Continuing Grace

Swamigal attained Samadhi (final liberation) on Aadi month, Swathi star, in the year 1951. As foretold by him, on the third day after his passing, blood flowed from his stomach, signifying his divine sacrifice. On the fourth day, he was ceremonially placed in Samadhi with full devotion by his followers.

The Samadhi shrine is now maintained by a committee elected by the public.

The temple was damaged during the civil unrest in 1985, 1987, and 1990, and again by the 2004 tsunami. With support from the public and the Ministry of Hindu Cultural Affairs, the temple has since been renovated and restored.

Annual Celebrations and Spiritual Activities

Every year, during Aadi month on Swathi star day, Guru Pooja, annadanam (free food distribution), and various social events are held in memory of Swamigal. Devotees from both local and international regions gather in large numbers.

In addition, spiritual classes, group prayers on Fridays, and bhajan sessions on special occasions continue to take place, keeping Swamigal’s legacy of service and devotion alive.

For more news Maatram News