Courage

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். 

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது. வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது.

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர்.

அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே. அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்துசெய்து பிச்சைக் காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

காணொலி https://www.youtube.com/watch?v=_RCTW7ZaCwM

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Courage is Another Name for Self-Confidence

A king’s daily routine of watching the sunrise takes an unexpected turn when he sees a beggar instead. His frustration leads to an impulsive decision, but the beggar’s fearless response teaches him a valuable lesson. A thought-provoking story about courage, self-confidence, and realization. Let’s see what happened.

In a certain town, there was a king. His daily routine included waking up early in the morning and watching the sunrise.

As usual, the king opened the window that day, but to his disappointment! Instead of the sunrise, his eyes fell upon a beggar. Frustrated, he thought, “Why does my gaze always land on this man’s face?” Filled with irritation, he turned away abruptly. In doing so, he hit his head against the wall, causing it to bleed. The pain was unbearable, and on top of that, his anger flared even more.

Enraged, he ordered the beggar to be brought before him. The guards dragged the beggar to the king’s presence. The royal court was assembled. The king, blaming the beggar for his injury, sentenced him to death.

Yet, the beggar was unshaken; instead, he burst into laughter. The people in the court were stunned.

The king, now even more furious, shouted, “Madman! Why are you laughing?”

The beggar calmly replied, “Oh King! When you saw my face, you merely got a small wound on your head. But now that I have seen your face, I am about to lose my head entirely. That thought made me laugh.”

The king’s head bowed in realization. Understanding his mistake, he revoked the punishment and set the beggar free.

Courage is another name for self-confidence. Without it, one may not even be able to save their own life in certain situations.

For more stories visit us Maatram News