Value of Respect

பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும்

ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பயணி அந்தவழியாகச் சென்றபோது 20 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.

அதன் பிறகு அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, “அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 20 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன்” என்றான். “என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?”, என்று கூறிவிட்டு புகைவண்டியின் தனது இருக்கை நோக்கி நடந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த பயணி ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவனும் அருமையான கோட் மற்றும் டை சகிதமான உடையில் விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் பயணியை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.
“அன்பரே! நீங்கள் என்னை மறந்து போய் இருக்கலாம். ஆனால் நான்
உங்களால் தான் இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம்” என்றான் கோட் சூட் வாலிபன். பயணியிடம் பழைய ரயில் நிலைய 20 ரூபாய் கதையை நினைவூட்டினான்.பயணி சொன்னார், “எனக்கு நினைவு வந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது.என்னப்பா?”.

கோட் சூட் வாலிபன் சொன்னான், “நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என் வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 20 ரூபாவை எனது திருவோட்டில் இட்ட பின் சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச் சென்றீர்கள். எனக்குள் ஒழிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான்.
அதுவரையில் பிச்சைகாரனாக திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்

. அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர் வரையில் நான் ஒரு சோம்பேறியாக, அழுக்காக, பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக, யாராலும் மதிக்கப்படாத, உருப்படாதவனாக இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். பிறகு தான் சிந்திக்க ஆரம்பித்தேன். நான் யார்? என்று, எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். அதன் பின் ஒரு முடிவுக்கு வந்தேன், வாழும் வரை எதையாவது சாதித்துவிட்டு போகலாமே என்று என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தினேன் எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அன்பரே!” என்றான்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

The Value of Respect

At a railway station, a beggar was sitting with a bag full of pencils. A traveler passed by and dropped a 20-rupee coin into the beggar’s collection bowl. Then he boarded the train and took his seat.

After a moment, a thought struck him. He quickly got up, went back to the beggar, and said,
“I’ll take pencils worth 20 rupees from your bag. After all, you too are doing a business, aren’t you?”
Saying this, he took some pencils and walked back to his seat in the train.

Six months later, the traveler attended a party.
There, among the well-dressed guests wearing fine coats and ties, he spotted the same man who had once been begging at the railway station.

Recognizing the traveler, the well-dressed young man approached him and said,
“Dear sir! You might not remember me, but it’s because of you that I am standing here today in this better state.”

He then reminded the traveler of the incident at the railway station with the 20-rupee story.
The traveler replied,
“I remember now! What are you doing these days? You seem to have transformed quite well.”

The young man in the coat and suit said,
“You are the reason behind my change and growth. I can never forget you in my lifetime.
You were the first person who treated me like a human being.
After you dropped 20 rupees into my bowl, you came back and took pencils worth that amount from me.
That simple act made me realize that I was a businessman too, not just a beggar.

Until that moment, I was just loitering around lazily, a dirty beggar, despised and ignored by society.
But your action woke me up. It made me think: Who am I? What are my values? Why was I born?
From that moment, I decided to stop begging and start a new life with dignity.

I am forever indebted to you. Thank you countless times, dear sir!”

For more stories visit us Maatram News