ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால்,அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே!
மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்’எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!’ என்று பதவி ஏற்பதுண்டு.
அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து,முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான்.
மக்கள் வாயைப் பிளந்தனர் ”இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!”
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ”மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!”
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான்
”மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?”
”தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!”
”அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?”
”தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!”
”பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?”
”அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா?
ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்;
அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை,அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்!
சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்!
உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!” என்றான் மன்னன்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
The Visionary King
Discover the inspiring tale of The Visionary King, who defied fate and transformed his destiny. Instead of accepting certain death, he turned a dreaded exile into a thriving kingdom. A powerful story of wisdom, preparation, and leadership.
There was a law in a city. According to that law, anyone could become the king of that city. However, the throne was only for five years! The day after those five years ended, the king would be taken to the other side of the river and left in the forest.
That forest had no human inhabitants, only wild and ferocious animals!
As soon as the king entered the forest, the beasts would tear him apart. This law could not be changed by anyone. Only those who accepted these conditions were fit to sit on the throne. Thus, whoever became king was destined for certain death after five years.
Because of this harsh law, most people were afraid to take the throne, and the kingdom remained without a ruler for long periods. However, some dared to accept it, thinking, “We are going to die anyway, so why not die as a king?”
Even among those who accepted the throne, many did not survive the full five years, as some died of heart attacks due to fear and anxiety.
One such king had completed his five-year rule. On that day, he had to cross the river and go into the forest. The entire city gathered to send him off.
The king arrived, dressed in his finest royal robes, adorned with jewelry, wearing his crown, and holding a golden sword encrusted with diamonds.
People gasped in shock: “He will be dead in half an hour! Why all this grandeur?”
Looking at the boat that was to take him across the river, he frowned and commanded,
“Is this the boat fit for a king? Bring a grander one! I will stand and travel. Bring a throne for me to sit on!”
Orders were given, and tasks were executed. Soon, a beautifully decorated boat sliced through the river, heading toward the other shore.
As people stood in stunned silence, the king waved his hand joyfully as the boat moved forward.
The boatman was the most shocked of all! Until now, every king he had taken across had been in tears, wailing and begging for their lives.
But this king was brimming with joy!
Unable to hold back, the boatman asked,
“Your Majesty! Do you know where you are going?”
“Yes, I am going to the other shore!”
“Do you realize that no one who has gone there has ever returned to this city?”
“I know. I, too, will not return to this city!”
“Then how are you so happy?”
“Oh, that? Do you want to know what I did?”
*”At the end of my first year as king, I sent a thousand hunters into the forest.
They hunted down and eliminated all the wild beasts!”
“At the end of the second year, I sent a thousand farmers.
They cleared the land and cultivated crops. Now, there are abundant grains and vegetables!”
“At the end of the third year, I sent a thousand architects and laborers.
Today, there are houses, palaces, roads, and even a royal court!”
“At the end of the fourth year, I sent a thousand government officials.
Now, the administration is well-organized. These 4,000 people live there with their wives and children!”

“So, I am not going to a forest anymore.
I am going to my own kingdom!
I am not going to die—I am going to live!
And not just live, but rule as king once again!”
“If you want a job as the royal boatman, you can come along with this boat and join me right now!”
Said the king with a smile.
For more interesting stories visit us Maatram News