ஒரு ஞானி இருந்தார். குடும்ப வாழ்க்கை மேற்கொண்ட ஒருவர் அவரிடம் வந்தார் . தான் ஞானம் பெற விரும்புவதாகவும் தாங்களே குருவாக இருந்து ஞானத்தில் சிறந்த ஞானம் எதுவோ அதை தெரிவிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்…!
உபதேசம் மூலம் ஞானத்தை இந்த குடும்பஸ்தருக்கு அறிய வைக்க முடியாது என ஞானி அறிந்தார்
தினமும் உன் வீட்டின் முன்னால் திண்ணையில் காலை முதல் மாலை வரை அமர்ந்திருக்கும்படியும் அந்த வழியாக சலவை தொழிலாளி கழுதையின் மீது பொதிகளை ஏற்றி வருவார் என்றும், காலையில் ஏற்றி வரும்போதும் மாலையில் திரும்பும்போதும் அதனை கவனிக்கும் படியும் கூறினார்
மறுதினம் பொழுது புலர்ந்தது குடும்பஸ்தர் திண்ணையில் அமர்ந்தார் சலவை தொழிலாளி அழுக்கு பொதிகளை கழுதை மேல் ஏற்றி வந்தார். மீண்டும் மாலையில் சலவை செய்த துணிகளையும் ஏற்றி சென்றார்.
மறுநாள் ஞானியிடம் சென்றான், நீங்கள் சொன்னது போல் காலையிலும் மாலையிலும் கழுதைகள் சென்றதையும் திரும்பியதையும் கவனித்தேன், ஆனால் அதில் ஞானம் தொடர்பான செய்தி இருப்பதுபோல் தெரியவில்லையே எனக் கூறினான்.
“அன்பானே குடும்பஸ்தனே!…. காலையில் கழுதைகள் அழுக்கு துணிகளை சுமந்து சென்றன. அப்போது “அழுக்கு துணிகளை சுமக்கிறோம் என்ற வருத்தம் இல்லை.” அதே போல் மாலையில் “சலவை செய்த துணியை சுமக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் இல்லை” துன்பம் வரும்போது அதிகள் துன்பம்மின்மையும் இன்பம் வரும்போது அதிக சந்தோசம் இல்லாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் நடுநிலையான மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுவே சிறந்த தானம்.
இந்த செய்தியையே அந்த கழுதைகள் மூலம் தரும் ஞானம் என்றார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Learn from the Donkey!
There once lived a wise sage. A man leading a family life approached him and expressed his desire to attain wisdom. He requested the sage to impart the greatest wisdom he knew.
The sage, realizing that wisdom could not be taught merely through preaching, decided on a different approach.
He instructed the man to sit on the front porch of his house every day from morning until evening. He told him that a washerman would pass by with a donkey carrying loads of clothes in the morning and return with them in the evening. The sage asked him to carefully observe the donkey during these times.
The next morning, as the sun rose, the man sat on his porch. As expected, the washerman arrived, loading dirty clothes onto the donkey. In the evening, he returned with freshly washed clothes on the donkey’s back.

The following day, the man went to the sage and said,
“As you instructed, I observed the donkey in the morning and evening. However, I fail to see any wisdom in it.”
The sage smiled and said,
“My dear Man, in the morning, the donkey carried the load of dirty clothes without any sorrow. In the evening, it carried the washed clothes without any joy. It neither lamented the burden of filth nor celebrated the freshness of clean clothes.
Likewise, in life, we must neither be overwhelmed by suffering nor overly elated by joy. True wisdom lies in accepting both happiness and sorrow with equanimity. This is the greatest lesson, and this is the wisdom that the donkey teaches.”
For more stories visit us Maatram News