பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் நூறு ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள் நூறு ரூபாய்!’ என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!
மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் நூறு ரூபாய்!’ என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். அடுத்து, ‘ஆறு பழங்கள் நூறு ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!
மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் நூறு ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.
முதியவர் சிரித்தபடி, போய்யா… அவன் என் மகன். இந்தப் பழமும் அவனுடையது தான். “ஆறு பழம் நூறு ரூபாய்” என விற்றால்… சட்டென வாங்குவதற்கு, நம் மக்களுக்கு மனமே வராது. அதனால் நான், ‘ஐந்து பழம் நூறு ரூபாய்’ என கூவிக்கொண்டுப் போவேன். அதன்பிறகு , “ஆறு பழம் நூறு ரூபாய்|” என அவன் வந்து சொன்னதும்… “அடடே லாபமாக இருக்கிறதே” என மக்கள் வாங்கிவிடுவார்கள். அவன்தான் உண்மையான வியாபாரி. மக்களின் மனதை மாற்றுவதற்காகத்தான் அவன் என்னை முன்னாடி அனுப்புகிறான் !” என்றார் முதியவர்.
இதே போன்று கதைகள் வாசிக்க மாற்றம் செய்திகள்
The Secret of Sales!

An elderly fruit vendor boarded a bus with his basket of fruits. He called out, “Five fruits for a hundred rupees!” trying to sell them. However, no one stepped forward to buy. Unable to carry the load any longer, he got off the bus.
Immediately after, a young man got on the same bus and called out, “Six fruits for a hundred rupees!” He made good sales.
In another bus, the elderly vendor once again tried to sell, calling out, “Five fruits for a hundred rupees!” But no one bought from him. Disappointed, he got off the bus. Then, the young man boarded and shouted, “Six fruits for a hundred rupees!” and sold them quickly.
A sales consultant from a large company was observing this scene. He called the elderly vendor aside and said, “You don’t have the cleverness of that young man! If you also sell six fruits for a hundred rupees, only then will you make sales. You should buy in bulk at a lower cost, reduce your profit margin, and sell more to make a profit, Grandpa!”
The elderly man smiled and said, “Go away… That young man is my son. These fruits belong to him as well. If I had directly called out ‘Six fruits for a hundred rupees,’ people wouldn’t have felt the urge to buy immediately. That’s why I go first, shouting ‘Five fruits for a hundred rupees.’ Then when he comes and says ‘Six fruits for a hundred rupees,’ people feel like they are getting a great deal and rush to buy! He is the real businessman. He sends me first to change people’s minds!”
For more stories visit us Maatram News