சுவாமி விபுலானந்தர் அவர்கள் 1892 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதியன்று, காரைதீவு என்னும் கிராமத்தில் சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். தமிழ் மொழி வளர்ச்சிக்கும், இலக்கியம், சமயம், தத்துவம், அறிவியல், இசை போன்ற பல துறைகளிலும் பங்களித்த பெரும் அறிஞராக இவர் திகழ்ந்தார்.

கல்விப் பயணம்
இவர் கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும், மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். கேம்பிரிட்ஜ் சீனியர் சோதனையில் வெற்றி பெற்ற பின்னர், புனித மைக்கேல் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றி, கொழும்பு ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டைய தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தார்.
1912-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியில் சான்றிதழ் பெற்று, மீண்டும் புனித மைக்கேல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1915-இல் கொழும்பு அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து அறிவியலில் பட்டயம் பெற்றார். அதே காலத்தில், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டித பரீட்சையில் பங்கேற்று, இலங்கையிலிருந்து அந்த பட்டத்தை பெற்ற முதலாவது நபராக திகழ்ந்தார்.
ஆசிரியப் பணியும் துறவறம்
இரசாயனவியல் உதவி விரிவுரையாளராகக் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றிய மயில்வாகனன், 1917-இல் யாழ்ப்பாணம் சம்பந்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராகக் கொண்டுவரப்பட்டார். பின்னர், 1920-இல் லண்டன் பல்கலைக்கழக BSc தேர்வில் வெற்றி பெற்றார்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும், திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் முகாமையாளராகவும், அதிபராகவும் பணியாற்றிய அவர், 1922-இல் இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து துறவறம் எடுத்து சென்னைக்குச் சென்றார். அங்கு சுவாமி சர்வானந்தரால் “சுவாமி விபுலானந்தர்” என்ற துறவறப் பெயருடன் தீட்சை பெற்று, இருவரும் சேர்ந்து பன்மொழி கட்டுரைகள், ஆய்வுகள் செய்தனர்.
அறிஞராகவும் ஆசிரியராகவும்
1931-ஆம் ஆண்டு, செட்டி நாட்டரசரின் வேண்டுகோளின்படி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றினார். அங்கு தமிழிசை குறித்த அவரது ஆராய்ச்சிகள் தொடங்கின. அதில் பன்னாட்டு முக்கியத்துவம் வாய்ந்த “யாழ் நூல்” என்ற அரிய நூலையும் 1934-இல் வெளியிட்டார்.
1943-இல் இலங்கையில் பல்கலைக்கழகம் தொடங்கிய போது, தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, இலங்கைப் பிரதேசங்களில் தமிழ் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை வகுத்தார்.
1947 ஜூலை 19, சனிக்கிழமை இரவு சுவாமி விபுலானந்தர் உடல் நலக்குறைவால் மறைந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திற்கு முன், மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Swami Vipulananda: A Scholar of the Three Tamil Traditions
Swami Vipulananda was born on March 27, 1892, in the village of Karaitivu to parents Samiththampi and Kannamma. His birth name was Mayilvaganam. He was a great scholar who contributed immensely to the development of the Tamil language and excelled in various fields including literature, religion, philosophy, science, and music.

Educational Journey
He received his early education at the Methodist English School in Kalmunai and later at St. Michael’s College in Batticaloa. After successfully passing the Cambridge Senior Examination, he briefly worked as a teacher at St. Michael’s College before joining the Teacher Training College in Colombo. There, he studied ancient Tamil literature under Professor K. Kandiah Pillai from South India.
In 1912, after receiving his teaching certification, he returned to teach at St. Michael’s College for two years. Then in 1915, he joined the Government Technical College in Colombo and earned a diploma in science. During this period, he also passed the Pandit Examination conducted by the Madurai Tamil Sangam, becoming the first person from Sri Lanka to receive this distinction.
Teaching Career and Spiritual Path
Mayilvaganam worked as an Assistant Lecturer in Chemistry at the Government Technical College in Colombo. In 1917, he was invited to join Jaffna’s St. Patrick’s College (Sampantharisiyaar College) as a science teacher. In 1920, he successfully passed the B.Sc. examination from the University of London.
He later served as the Principal of Manipay Hindu College and also held positions as administrator and principal of the Koneswara Hindu College in Trincomalee. In 1922, he joined the Ramakrishna Mission, renounced his teaching career, and went to Chennai (Madras) to take up monastic life. There, under the guidance of Swami Sarvananda, he was given the monastic name “Swami Vipulananda.” Together, they contributed to scholarly publications and multilingual research.
Scholar and Professor
In 1931, at the invitation of Chettinad royalty, he joined Annamalai University in Chidambaram as its first Professor of Tamil. It was during this period that his research in Tamil music began, culminating in the publication of the landmark book Yazh Nool in 1934.
In 1943, when the University of Ceylon (Sri Lanka) was established, he was appointed as the first Professor of Tamil. He laid out strategic plans for the advancement of Tamil studies throughout the island.
Final Days and Legacy
On Saturday night, July 19, 1947, Swami Vipulananda passed away due to ill health. His remains were buried beneath a tree in front of the Sivananda Vidyalayam in Batticaloa, a school he helped establish.
In honor of his lifelong service to Tamil culture and education, the Government of Sri Lanka recognized him as a National Hero. Furthermore, the All-Ceylon Tamil Language Day, celebrated annually in schools across the country, is observed on the anniversary of his death.
For more news Maatram News