நிகழ்காலம் எனும் வைரம்
நிகழ்காலம் எனும் வைரம்

நிகழ்காலம் எனும் வைரம்

நிகழ்காலம் எனும் வைரம்

வியாபாரி ஒருவர். எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் சரியாக திட்டமிட்டு செயல்படாததால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. கவலையில் ஆழ்ந்திருந்த அவர், வீட்டுக்குப் போக விரும்பாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த, தொலைதூர ஆற்றங்கரைக்குச் சென்றார். அங்கே ஆற்றின் மணலில் மெல்லிய நிலவொளியில் அமர்ந்து தன் நினைவுகளை ஓட விட்டான். தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட துயரம் அவனை வாட்டியது. கூட்டாளிகள் தன்னைக் நம்பவைத்துக் கழுத்தறுத்தார்கள் என்று எண்ணி வேதனையில் மூழ்கினார்.

மறுபுறம், எப்படி வியாபாரம் செய்யப் போகிறோம்… குடும்பத்தை எப்படி நடத்தப் போகிறோம் என எதிர்காலக் கவலைகள் எழுந்தன. இந்தச் சிந்தனையினாலேயே அவனுடைய வலது கை அவனை அறியாமல் ஆற்றின் மணலை துழாவி அவன் கையில் தட்டுப்பட்ட சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான்.

விடியல் தொடங்கியது! வெளிச்சம் பரவியது. ஆற்றில் எறிய கற்கள் தீர்ந்தன. கடைசியாக கையிலிருந்த கல்லைப் பார்த்து வியந்தான். காரணம் – அது சாதாரண கூழாங்கல் அல்ல. வைரம்

கொள்ளையர்கள் தாங்கள் கொள்ளையடித்துச் சென்ற விலைமதிப்பற்ற வைரங்களைத் தவறவிட்டு ஓடியுள்ளனர். அவன் இருட்டில் இன்னதென்று அறியாமல் எடுத்து வீசியிருக்கிறான்.

படிப்பினை – நம்மில் பலர் அந்த வியாபாரி போல் தான். கடந்த காலம் மற்றும் எதிர்கால நினைவுகளில் மிதந்துகொண்டு நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். நிகழ்காலம் என்கிற வைரக்கற்களை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை சிறப்பாக வரவேற்கும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

The diamond of the present

A businessman. He wanted to become a big businessman in the future. But he had to face a huge loss because he did not plan properly. Deep in his worries, he did not want to go home and left the city to a remote, secluded riverbank. There, he sat on the sand of the river in the thin moonlight and let his memories flow. The grief of the loss in business consumed him. He was immersed in pain, thinking that his partners had convinced him and strangled him.

On the other hand, future worries arose about how we were going to do business… how we were going to take care of our family. Because of this thought, his right hand, without knowing it, raked the sand of the river and picked up small stones that fell into his hand and threw them into the river, and he sat there all night.

Dawn began! The light spread. The stones to throw into the river ran out. Finally, he was amazed at the stone in his hand. The reason – it was not an ordinary pebble. Diamond

The robbers ran away missing the precious diamonds they had stolen. He took them in the dark and threw them away.

Lesson – Many of us are like that merchant. We are wasting the diamonds of the present by dwelling on the past and future. If we use the diamonds of the present properly, the future will welcome us better.