கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்
கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்

கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்

கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்

கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நண்பர்களுடன் இந்த பண முதலீடு தொடர்பான விவாதங்கள் அடிக்கடி எழும். என்னையும் இதில் முதலீடு செய்யச் சொல்லி அறிவுரை கூறியவர்களும் உள்ளனர்.
ஆனால் ஆரம்பம் முதலே இந்த வகையான முதலீடுகளில் எனக்கு ஒரு மாற்றுக் கருத்து இருந்தது.

அவ்வாறான விவாதங்களில் கூட, சில நேரங்களில் இது தொடர்பாக உறுதியாக எதிர்த்து நிற்க முடியாமல் போனதற்கு காரணம் – அந்தப் பண வகைகளின் வேகமான வளர்ச்சியே.

இந்த வகை பணம் எவ்வாறு பெறுமதி அதிகரித்தது, ஏன் திடீரென விழுந்தது என்பதைக் காண்பதற்கு முன், கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

💡 கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?

கிரிப்டோ கரன்சி என்பது நாம் நாளாந்தம் பயன்படுத்தும் பணம் போல தோன்றினாலும், கண்ணால் பார்க்க முடியாத இலத்திரனியல் (Digital) பணம் ஆகும். இது இணையத்தின் வழியே மட்டுமே பரிமாற்றப்படும் ஒரு முறை – எந்த நாட்டின் மத்திய வங்கி அல்லது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

இதன் முக்கிய தன்மை – மையமற்ற (Decentralized) அமைப்பு.
அதாவது, எந்த ஒரு வங்கியும் இதை நிர்வகிப்பதில்லை. பல ஆயிரம் கணினிகள் இணைந்து இந்தப் பரிவர்த்தனைகளை சரிபார்க்கின்றன.

இந்த தொழில்நுட்பம் Blockchain எனப்படும் – ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஒரு “பிளாக்காக” பதிவாகி, அதை யாராலும் மாற்ற முடியாத வகையில் சங்கிலி போன்று இணைக்கப்படுகிறது.

👨💻 இதை யார் உருவாக்கினர்?

கிரிப்டோ கரன்சியின் முதல் வடிவம் Bitcoin (பிட்காயின்) ஆகும்.

இதை 2009 ஆம் ஆண்டு Satoshi Nakamoto என்ற பெயரைப் பயன்படுத்திய (ஆனால் உண்மையில் யார் என்பது இன்னும் தெரியாத) ஒருவரோ அல்லது குழுவோ உருவாக்கினர்.

கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்

அந்த நேரத்தில், உலகளாவிய பொருளாதாரம் ஒரு நெருக்கடியில் (2008 recession) இருந்தது.
அதன் தாக்கத்திலிருந்து மக்கள் வங்கிகளை நம்ப முடியாமல் போனார்கள்.
அதற்கான மாற்றாக – “மத்திய வங்கி இல்லாமல் மக்களிடையே நேரடியாக பணம் பரிமாற்றம் செய்யும் வழி” என்ற எண்ணமே பிட்காயின் உருவாக்கத்திற்குக் காரணமானது.

🔗 பின்னர் நடந்தது…

பிட்காயினுக்குப் பிறகு, Ethereum, Binance Coin, Solana, Dogecoin போன்ற நூற்றுக்கணக்கான கிரிப்டோ கரன்சிகள் உருவாகின.

தொடக்கத்தில் சில பணங்கள் குறைந்த மதிப்பில் இருந்தாலும், சில ஆண்டுகளில் அவை பெரும் அளவில் உயர்ந்தன – இதுவே மக்களை அதில் முதலீடு செய்ய ஊக்குவித்தது.

💻 கிரிப்டோ கரன்சியின் உண்மையான பயன்பாடு

பெரும்பாலானோர் இதை முதலீடாக பார்க்கிறார்கள், ஆனால் சிலர் இதை பணம் பரிமாற்றம் செய்யவும்,
வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பவும், NFT / ஆன்லைன் கேமிங் வழியாகப் பயன்படுத்தவும் செய்கிறார்கள்.

சில நாடுகளில் இது DeFi சேவைகள் (வங்கியில்லா கடன், வட்டி) மற்றும் Stablecoin மூலம் மதிப்பு பாதுகாப்புக்கும் பயன்படுகிறது.

ஆனால் சட்டக் கட்டுப்பாடு இல்லாததால், இது மோசடி, பண சலவை, சட்டவிரோத பரிவர்த்தனைகள் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.

ஆனால் சமீபத்திய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கை மாற்றங்களும் (முக்கியமாக அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள், வட்டி விகித மாற்றங்கள் போன்றவை) இத்தகைய டிஜிட்டல் பணங்களின் பெறுமதியை கடுமையாகக் குறைத்துள்ளன.

அதனாலே, பலரும் இப்போது இதனை ஒரு அபாயகரமான கனவு முதலீடு என்று பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

💹 பங்கு சந்தை (Share Market) எப்படி வேறுபடுகிறது?

பங்கு சந்தையில் நாம் முதலீடு செய்யும் போது,
அது ஒரு உண்மையான நிறுவனம் (Company) மேல் முதலீடு.

அந்த நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருட்கள், விற்பனை வருமானம், லாபம், சேவைகள் – இவை அனைத்தும் அதன் பங்கின் மதிப்பை தீர்மானிக்கின்றன. எனவே பங்கு சந்தையில் மதிப்பு உருவாகும் காரணம் நிஜ உற்பத்தி மற்றும் பொருளாதாரம். அங்கு அரசு கண்காணிப்பும், சட்டமும், பாதுகாப்பும் இருக்கின்றன.

🪙 ஆனால் கிரிப்டோவில் என்ன நடக்கிறது?

கிரிப்டோவில் எந்த நிறுவனம் அல்லது பொருள் இல்லை.
அதன் மதிப்பு முழுமையாக மக்கள் அதை வாங்க தயாரா இல்லையா என்பதிலேயே அமைகிறது.

  • மக்கள் அதிகமாக வாங்கினால் ➜ விலை ஏறுகிறது
  • மக்கள் விற்றுவிட்டால் ➜ விலை கீழே விழுகிறது
    அதாவது இது ஒரு Demand-Based System – நிஜமான பொருள் இல்லாமல், “நம்பிக்கை” அடிப்படையில் இயங்கும் சந்தை.
கிரிப்டோ கரன்சியின் மறைமுக உலகம்

🧑🌾 எளிய உதாரணம்:
இதை அரிசி மாஃபியா போல நினைத்துக்கொள்ளலாம் 👇
நாடு முழுக்க அரிசி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், சில பெரிய வியாபாரிகள் (மாஃபியா) தங்கள் கிடங்குகளில் (Godown) அரிசியை மறைத்து வைப்பார்கள்.

அரிசி கிடைக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். ➜ தேவை அதிகரிக்கிறது ➜ விலை மேலே செல்கிறது. அப்போது அந்த மாஃபியா தங்கள் மறைத்து வைத்த அரிசியை விற்று பெரிய லாபம் சம்பாதிப்பார்கள். மக்கள் வாங்கவேண்டிய தேவை இல்லாமல் போக, விலை மீண்டும் கீழே விழும்.

💥 கிரிப்டோ கரன்சி – அபாயகரமான கனவு 💰

கிரிப்டோ என்பது நிஜப் பொருள் இல்லாத டிஜிட்டல் பணம்.
மக்கள் வாங்கும்போது விலை உயரும், விற்கும்போது விழும்.

இது பங்கு சந்தை மாதிரி அல்ல – எந்த நிறுவனம், பொருள், சட்டம் கூட இதை பாதுகாக்காது.
அதை பெரிய முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு இயக்கலாம் – அரிசி மாஃபியா போல் சிலர் மறைத்து வைத்து விலை உயர்த்துவார்கள், பிறகு திடீரென விற்றுவிட்டால் சந்தை கீழே விழும்.

இது மீண்டும் உயரும் வாய்ப்பும் உண்டு ஆனால் அதில் நம்பிக்கை வைக்காதீர்கள். ஏற்கனவே இழந்திருந்தால், மீண்டும் உயரட்டும் என்று பிரார்த்தியுங்கள்… ஆனால் நம்பிக்கை வைத்து எதிர்பார்க்காதீர்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

🪙 Cryptocurrency

For more than ten years, discussions about investment with friends have often included this topic. Some even advised me to invest in it.
But right from the beginning, I had a different opinion about such investments.

Even during those discussions, sometimes I couldn’t strongly oppose it — mainly because of the rapid growth of these digital currencies.

Before we look at how their value increased so fast and why it suddenly fell, let’s first understand what cryptocurrency actually is.


💡 What is Cryptocurrency?
Cryptocurrency may look like ordinary money, but it is digital — you can’t see or touch it.
It is exchanged only through the internet and is not controlled by any central bank or government.

Its main feature is that it is decentralized — no single bank or authority manages it. Thousands of computers work together to verify transactions.
This technology is called Blockchain — every transaction is recorded as a “block” and linked like a chain in a way that cannot be altered.


👨💻 Who Created It?
The first form of cryptocurrency was Bitcoin.
It was created in 2009 by an individual or group using the name Satoshi Nakamoto (the true identity remains unknown).

At that time, the world was facing a major financial crisis (the 2008 recession).
People had lost trust in banks.
So, Bitcoin was designed as a system to allow people to transfer money directly without the need for central banks.


🔗 What Happened Next…
After Bitcoin, hundreds of other cryptocurrencies like Ethereum, Binance Coin, Solana, and Dogecoin were created.

Initially, they were worth very little, but over the years, their prices skyrocketed — this attracted millions of investors.


💻 Real Uses of Cryptocurrency
Most people see it as an investment,
but some use it for money transfers, remittances from abroad, or NFTs and online gaming.

In some countries, it is also used in DeFi services (decentralized finance — loans and interest without banks) and for value stability through Stablecoins.

However, due to the lack of legal regulation, it is also used for fraud, money laundering, and illegal transactions.

Recent political and economic policy changes — especially new U.S. trade tariffs and interest rate adjustments — have caused the value of these digital currencies to fall sharply.
As a result, many now view cryptocurrency as a risky dream investment.


💰 What Determines Its Value?
The value of cryptocurrency depends only on one factor — people’s trust and demand.


💹 How Is the Share Market Different?
When you invest in the stock market, you invest in a real company.
The company’s products, sales, profits, and services determine the share’s value.
So, the stock market’s value is based on real economic production — and it operates under government laws and protections.


🪙 But What Happens in Crypto?
In crypto, there’s no company or real product behind it.
Its value depends entirely on whether people are willing to buy it.

  • If more people buy → the price rises.
  • If people sell → the price drops.

It’s a demand-based system — a market running purely on trust, not real assets.


🧑🌾 A Simple Example:
Think of it like a rice mafia. 👇
Even if the country produces enough rice, a few big traders might hide it in warehouses.
People think there’s a shortage → demand rises → price goes up.
Then those traders sell at high prices and make big profits.
When demand drops, prices fall again.


💥 Cryptocurrency — A Risky Dream 💰
Cryptocurrency is digital money without real backing.
Its price rises when people buy and falls when people sell.
It’s not like the stock market — no company, product, or law protects it.

Large investors can manipulate prices at will —
like the rice mafia, they can “hold” coins to raise prices, then sell off suddenly to crash the market.

Yes, the price might rise again —
but don’t place blind faith in it.
If you’ve already lost money, hope it recovers…
but don’t expect it based on mere belief.