
சாதாரண தர பரீட்சையில் சாதிக்கும் மாணவர்கள் சிலர் உயர்தர பரீட்சையில் தவறுவது ஏன்?
சாதாரண தர பரீட்சையில் நன்கு சாதிக்கும் சில மாணவர்கள் உயர்தர பரீட்சையில் சறுக்குவது ஏன்? Why Some High Performing O/L Students Struggle in A/L?
கடந்த சில வருடங்களாகவே O/L பெறுபேறு வெளியானவுடன் 9A, 8A, 7A என்பதெல்லாம் Just like that என்ற வகையில் மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இவ்வாறு எல்லா பாடங்களிலும் A & B சித்தி பெறுவது சாதாரணமான விடயம் அல்ல. அதற்காக எல்லா பாடங்களிலும் பரந்துபட்ட அறிவு, விடாமுயற்சி மற்றும் ஆசிரியர் வழிகாட்டல் அவசியம். அவ்வாறான பல மாணவர்கள் உயர்தரத்திலும் தமது திறமையை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் நல்ல பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்துக்குச் செல்லும் சில மாணவர்கள் அங்கே கோட்டை விடுகின்றனர். சிலர் 3S சித்தி பெறுபேற்றைக்கூட பெறமுடியாமல் போவது வருந்த வேண்டிய விடயம்.
ஏன் அவ்வாறு நிகழ்கிறது?
🛑 01. சாதாரண தர பரீட்சையில் நல்ல பெறுபேற்றைப் பெற்றுவிட்டால் உயர்தர பரீட்சையில் Bio Science or Maths படிக்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. (இதற்கு பல விதிவிலக்குகள் இருக்கின்றன) இந்த இடத்தில் தான் பெற்றோர்களும், மாணவர்களும் முதலாவது பிழையை விடுகின்றனர். உண்மையில் அத்துறையில் அம் மாணவனுக்கு ஆர்வம் இருக்கிறதா? அறிவியல் ரீதியாக Problemகளை Solve பண்ணக்கூடிய ஆற்றல் இருக்கிறதா? என்பதை அறியாமலேயே சமூகத்தால் திணிக்கப்படுகிறார்கள். O/L எழுதிய ஒவ்வொரு மாணவனும் அடுத்தவர்களின் Adviceகளால் திணிக்கப்படமுன் முதலாவதாக UGCயின் பல்கலைக்கழக அனுமதி கையேட்டை எடுத்து உயர்தரத்தில் உள்ள பாடவிதானங்கள், அதற்கு கிடைக்கும் பல்வேறு பல்கலைக்கழக அனுமதி வகைகள் மற்றும் எதிர்கால தொழில்வாய்ப்புகள் பற்றி அறிவது அவசியம். இன்று வணிகவியல், கணக்கியல், Information Technology போன்ற பல்வேறு துறைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு மாணவனுடைய ஆர்வம், ஆற்றலைப் பொறுத்து உயர்தர துறையை தேர்வு செய்ய வேண்டுமே தவிர Just O/L பெறுபேற்றை வைத்து அல்ல. O/Lஐ பொறுத்தவரை பெரும்பாலான பாடங்கள் ஒரு மாணவனின் மனன சக்தியையே (Memory Intelligence) சோதிக்கின்றன. O/L கணித பாடம் கூட குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள் சிந்தித்து விடை அளிப்பதாகவே இருக்கும். ஆனால் A/L Bio & Maths Stream அவ்வாறானதல்ல. Biology பாடம் தவிர்ந்த Combined Maths, Physics, Chemistry போன்ற பாடங்கள் Memory Intelligenceஐ தாண்டி Analytical Intelligence, Problem Solving ability, Critical Thinking, Logical Reasoning போன்ற பல விடயங்களை சோதிக்கின்றன. மனன சக்தியை முதன்மையாகக் கொண்ட ஒரு முறையிலிருந்து இந்த சூழலுக்கு மாறும் போது சில மாணவர்கள் தங்களை அதற்கு தயார்படுத்த தடுமாறுவதால் பெறுபேறுகளும் எதிர்பார்த்த அளவு கிடைப்பதில்லை. (எவ்வாறு தயார்படுத்தலாம் என பதிவின் இறுதியில் பார்க்க).
🛑 02. O/Lஐ பொறுத்தவரை சில வருடங்களுக்கு முன்பெல்லாம் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் போன்ற கடின பாடங்களுக்கே தனியார் வகுப்புகள் இருந்தன. இப்போது தனியார் வகுப்புகள் இல்லாத பாடங்களே இல்லை எனலாம். மாணவர்கள் ஆசிரியர்களால் Spoon Feed பண்ணப்பட்டு அதை அப்படியே பரிட்சையில் ஒப்புவித்து நல்ல பெறுபவர்களை பெற்று உயர்தரத்துக்கு வந்து சுயமாக சிந்திக்கும் ஆற்றல் இன்றி அல்லுழுகின்றனர். சில மாணவர்கள் O/Lலில் கணித, விஞ்ஞானத்தில் புலியாக இருந்து ஏனைய பாடங்களில் கோட்டை விட்டும் உயர் தரத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற இதுவே காரணமாக அமைகிறது.
🛑 03. எமது நாட்டின் போட்டி நிறைந்த உயர்தர கல்வித் துறையை பொருத்தவரையில் தனியார் வகுப்புகள் என்பவை தவிர்க்க முடியாதவை. A/L என்பது பாடப்புத்தகங்கள் எதுவும் இன்றி ஆசிரியரின் வழிகாட்டலிலேயே முழுமையாக தங்கி இருக்க வேண்டியுள்ளது. ஆனால் O/L போல் ஆசிரியரால் எல்லாவற்றையும் Spoon Feedபண்ண முடியாது. மாணவர்கள் சுயமாக கற்று வினாக்களுக்கு விடையளிக்கும் ஆற்றலை வளர்த்தால்த்தான் உயர்தரத்தில் வெற்றி பெற முடியும்.
🛑 04. உயர்தர வினாத்தாள்கள் O/L போல் அன்றி ஆழமாகவும் சிக்கல் வாய்ந்ததாகவும் இருக்கும்.
🛑 05. போட்டியால் உண்டாகும் அழுத்தம்: உயர்தரத்தை பொருத்தவரை பல்கலைக்கழக அனுமதிக்காக போட்டி போட்டு கற்க வேண்டிய நிலைமை மாணவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது.
🛑 06. மன அழுத்தம் & பயம்: (Stress & Anxiety) சமூகத்தால் தன் மீது வைக்கும் எதிர்பார்ப்பு. இதனால் சில மாணவர்கள் அழுத்தத்திற்கும், பயத்துக்கும் உள்ளாகிறார்கள்.
🛑 07. Bio & Mathsஐ பொறுத்தவரை போட்டி போட்டு கற்கக் கூடிய வகுப்பறைச் சூழல், அப்பிராந்தியத்தில் சரியான வழிகாட்டும் தனியார் வகுப்புகள் இன்மையும் பாதிப்பு செலுத்தும்.
🛑 08. இவை தவிர குடும்ப சூழ்நிலை, பொருளாதார நெருக்கடிகள், நோய் நிலைமைகள் போன்றவையும் செல்வாக்கு செலுத்தும். எனவே உயர்தர விஞ்ஞான துறையில் கற்கும் மாணவர்கள் (ஏனைய மாணவர்களுக்கும் பொருந்தும்)
தமது ஆற்றலை வளர்த்துக் கொள்ள:
✅ 01. சுய கற்றலுக்கு அதிக நேரத்தை ஒதுக்குதல்
✅ 02. கடந்த கால வினாத்தாள்களை பூள்ளியிடல் முறைக்கு ஏற்ப விடையளித்து பழகுதல். (குறைந்தது கடந்த 25 வருட Past Papers ஆசிரியர் வழிகாட்டல் இன்றி தாமாக செய்தல். சிக்கலானவற்றுக்கு ஆசிரியர் வழிகாட்டலை பெறல்)
✅ 03. கட்டமைப்பு மற்றும் பல்தேர்வு வினாக்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குதல்
✅ 04. உயர்தரம் கற்கும் காலப்பகுதியில் வீண்பராக்குகள், சமூக வலைத்தள பாவனையில் இருந்து ஒதுங்கியிருந்து தமது முழு கவனத்தையும் கல்வியில் செலுத்தல்.
✅ 05. புற அழுத்தங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல். இதற்கு ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கல். அழுத்தங்களுக்கு உள்ளாக மாணவர்களுக்கு உளவியல் சிகிச்சை அளித்தல்.
✅ 06. தூங்கும் நேரத்தை 6 to 8 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்துவதோடு உடலுக்கு ஓய்வு வழங்குதல் மற்றும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சரியான திட்டமிடலுடன் உயர்தர கற்கையை தெரிவு செய்து அதற்காக விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். வாழ்த்துக்கள்!
மேலதிக செய்திகளுக்கு மாற்றம் செய்திகள்
Why do some students who succeed in the ordinary level exams fail in the higher level exams?
Why Some High Performing O/L Students Struggle in A/L?
In recent years, it has become common to see students scoring 9As, 8As, or 7As in the O/L examinations with ease. Achieving A and B grades across all subjects is no simple feat — it requires broad knowledge, perseverance, and effective teacher guidance. Many such students continue to perform well in A/Ls too. However, it is unfortunate that some of these high-achieving O/L students fail to perform in A/Ls — some even struggle to secure just 3 simple passes (S grades).
So, why does this happen?
🛑 01. The Misconception: “If you did well in O/Ls, you must choose Bio Science or Maths for A/Ls.”
This is an unwritten rule in society, and it’s where students and parents often make their first mistake. They rarely question whether the student is genuinely interested in the subject or has the ability to solve analytical problems in science. Instead, they are pressured by societal expectations.
Before choosing A/L streams, students must consult the UGC University Admission Handbook to understand available streams, university eligibility, and future career opportunities. Today, fields like Commerce, Accounting, and Information Technology offer abundant opportunities. Therefore, A/L stream selection must be based on a student’s interest and capability, not just their O/L results.
O/L subjects mostly test memory-based intelligence, while even subjects like O/L mathematics are confined within a limited framework. But A/Ls, especially in Biology, Physics, Chemistry, and Combined Maths, test analytical thinking, problem-solving skills, critical reasoning, and more. Students who excel in rote learning often struggle with this transition, resulting in lower-than-expected performance.
🛑 02. The “Spoon Feeding” Trap
In the past, private tuition was reserved for difficult O/L subjects like Science, Maths, and English. Today, almost every subject has private classes. Students are spoon-fed content and reproduce it in exams without truly understanding it. When they move to A/Ls, they lack the independent thinking and self-study skills required. This explains why students who excel in Science and Maths in O/Ls but neglect other subjects may not thrive in A/Ls.
🛑 03. Heavy Reliance on Private Tuition in A/Ls
Given Sri Lanka’s competitive A/L education system, private tuition has become essential. A/Ls depend heavily on teachers’ guidance, often without structured textbooks. But unlike O/Ls, A/L teachers cannot spoon-feed everything. Students must develop independent learning skills to succeed.
🛑 04. A/L Exam Papers Are Deep and Complex
Unlike O/Ls, A/L question papers are more in-depth and complex, requiring deeper understanding and application of knowledge.
🛑 05. Pressure from Competition
The intense competition for university entrance causes significant mental pressure among A/L students.
🛑 06. Stress and Anxiety
Social expectations placed on students can lead to fear, stress, and anxiety, negatively affecting performance.
🛑 07. Lack of Proper Guidance in Some Regions
In some areas, particularly for Bio and Maths streams, a lack of competitive academic environments and quality private tutors also impacts performance.
🛑 08. Other Contributing Factors
Family background, financial difficulties, health issues, and other personal factors also influence students’ academic achievements.
✅ How Can A/L Students Improve Their Performance?
Here are some practical steps — especially for science stream students (though applicable to others too):
✅ 01. Allocate More Time for Self-Study
Develop independent learning habits instead of relying solely on teachers.
✅ 02. Practice Past Papers
Answer at least the last 25 years of past papers independently, then seek teacher help for difficult ones.
✅ 03. Focus on Structured and MCQ-Type Questions
Understand how structured questions and multiple-choice questions are evaluated.
✅ 04. Eliminate Time-Wasters
Avoid distractions like excessive social media and invest full focus on studies.
✅ 05. Avoid External Pressures
Family members should support rather than pressure students. If students experience stress or anxiety, they should be offered counseling support.
✅ 06. Sleep and Exercise
Get 6–8 hours of sleep, rest well, and include physical activity in daily routines to maintain health and focus.
With proper planning, dedication, and the right mindset, students can succeed in A/Ls regardless of how challenging the transition may be.