விளைச்சலை அதிகரிக்கும் மைக்கோரைசா
நெல்லின் வேரோட்டம், வறட்சி தாங்கும் திறன் மற்றும் பொஸ்பரஸ் உறிஞ்சலை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்கும் மைக்கோரைசா (VAM – வாம்)
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
தற்காலத்தில் இளம் தலைமுறை விவசாயிகள் குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெறுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். “தரமான” செயற்கை உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், மண்வளத்தைக் காக்கவும், உரச் செலவைக் குறைக்கவும் ஏதுவாக இருப்பவை நுண்ணுயிர் உரங்களாகும். ஒருங்கிணைந்த உர நிர்வாகத்தில் நுண்ணுயிர் உரங்கள் பயன்படுவதால், நிலத்தின் வளம் கூடுவதுடன், சுற்றுச்சூழலும் காக்கப்படுகிறது.
நன்மை செய்யும் நுண்ணுயிர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரக் கலவையே இந்த வாம் நுண்ணுயிர் உரமாகும்.
VAM (வேம்) என்பது பயிர்களின் வேரோடு கூட்டு வாழ்வு கொண்டுள்ள வாஸ்குலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (VAM) எனப்படும் மண்ணில் வாழும் வேர் உட்பூசணம் ஆகும். இது பயிர்களின் சத்துக்களை வேர்கள் எடுத்துக்கொள்ள வைக்கும் முக்கிய பணியைச் செய்கிறது.
பயன்கள்:
🍃
அதிகரிக்கப்பட்ட வேர்களின் அமைப்புகள் மூலம் மண்ணில் கரையாத நிலையில் உள்ள பொஸ்பரஸை கரைத்து, பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகிறது. இவை வேரிலும் மண்ணிலும் அடர்ந்து பரவி, வெகு தொலைவுக்குச் சென்று மண்ணிலுள்ள பொஸ்பரஸ் மற்றும் ஏனைய சத்துகளையும் நீரையும் உறிஞ்சி, ஒரு குழாயைப் போல இயங்கி, வேரின் கலங்களுக்கு வழங்குகின்றன.
🍃
காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில் பதிக்க உதவுகிறது. ஆகவே VAM ஆனது பயிர்களின் முக்கிய சத்துக்களான நைட்ரஜன், பொஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான நாகம், மங்கனீஸ், இரும்பு, கோபால்ட் மற்றும் மொலிப்டினம் போன்றவற்றையும் பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவுகிறது.
🍃
மண்ணில் உள்ள பயிர் நோய்களை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்திலிருந்து பயிர்கள் தாங்கி வாழ வகை செய்கிறது. இப்பூஞ்சணம் வேரில் அடர்ந்து பரவுவதால், வேரைத் தாக்கும் நோயை உண்டாக்கும் நோய்ப்பூஞ்சணங்கள் மற்றும் நூற்புழுக்களின் (Nematodes) தாக்கம் கட்டுப்படுகிறது.
மேலும், பொஸ்பரஸ் பசளைக்கு ஏற்படும் செலவில் 25% மிச்சமாகிறது. பயிரின் வளர்ச்சியைத் தூண்டுவதால், 10-15% விளைச்சல் கூடுகிறது. வேர் முடிச்சுகள் உருவாகி, நைட்ரஜன் நிலைநிறுத்தும் திறனும் மேம்படுகிறது.
🍃
மரங்களின் வளர்ச்சியை நாற்று நிலை முதற்கொண்டு ஊக்குவித்து, மரத்தின் சுற்றளவை அதிகரிக்கிறது.
🍃
மண்ணின் நீர் வைத்திருக்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் வறட்சி, வெள்ளம் போன்ற காலங்களில் பயிரைப் பாதுகாக்கிறது.
நெற் செய்கையில்:
ஏக்கருக்கு 2 லிட்டர் போதுமானது. (350 மில்லி / 16 லீ தாங்கி)
100% இயற்கை விவசாயமாயின் 3 ஆம் நாளிலும், இரசாயன விவசாயமாயின் 14 ஆம் நாளிலும் தரைக்கு கொடுக்கலாம்.
நெகிழிப் பைகளில் (Grow Bags) வளர்க்கப்படும் நாற்றுகளுக்கு ஒரு பைக்கு 10 கிராம் VAM போதும்.
1,000 கிலோ சேதன உரக் கலவையில் 3 கிலோ VAM கலக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் பயிர்கள்:
🍃🍃🍃🍃
நெல், காய்கறிப் பயிர்கள், பழவகைப் பயிர்கள், மரக்கன்றுகள், மலை நாட்டுத் தோட்டப் பயிர்கள், அனைத்து நாற்றுமேடைப் பயிர்கள் மற்றும் அனைத்துப் பயிர்களும்.
கவனிக்க வேண்டியவை:
🍃🍃🍃🍃
நுண்ணுயிர் உரங்களை வெய்யில் படாத, குளிர்ச்சியான மற்றும் உலர்ந்த இடத்தில் சேமிக்க வேண்டும்.
இவற்றை இரசாயன உரங்கள், களைக்கொல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயன பூசணக்கொல்லியுடன் நேரடியாக கலக்கக் கூடாது.
சேதனப்பொருள்கள் மற்றும் தொழுவுரம் அதிகமாக இருக்கும் நிலத்தில் நுண்ணுயிர் உரங்களின் செயலும் அதிகமாக இருக்கும்.
மாலை வேளைகளில் தெளித்தல் நன்று.
இலங்கையில் இவற்றின் பயன்பாடு:
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
அம்பாறை மாவட்டத்தில் மல்வத்தையில் உள்ள ஆசிரியரான ஓர் நெல் உற்பத்தியாளரின் விளைச்சல் ஏக்கருக்கு 28 மூட்டைகளில் இருந்து 35 மூட்டைகளாக உயர்ந்த வெற்றிச் செய்தியை 02 மே 2024 அன்று பதிவிட்டிருந்தோம். இவர் VAM இனை இரசாயன பசளைகளுடன் குறித்த கால இடைவெளியில் பயன்படுத்தி விளைச்சலை உயர்த்தியிருந்தார்.
விதை நெல் உற்பத்தி செய்யும் அம்பாறை, சம்மாந்துறை பகுதி விவசாயிகள் கடந்த சில வருடங்களாக இவற்றை இரசாயன பசளைகளுடன் குறித்த கால இடைவெளியில் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக பயன்படுத்தி வருவதாக அறிய முடிகிறது.
கிளிநொச்சி, வவுனியா மாவட்ட நெல் விவசாயிகளும் கடந்த சில வருடங்களாக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
இலங்கையில் மத்திய, வடமேல், வடமத்திய மாகாணங்களில் ஏற்றுமதி செய்யப்படும் மரக்கறி, பழங்களின் உற்பத்தியில் இவை பயன்படுகின்றன.
மேலும், பெருமளவில் வடமாகாண விவசாயிகளும் நீண்ட காலமாக இவற்றை வெங்காயம் மற்றும் மரக்கறி உற்பத்தியில் பயன்படுத்தி வருவதாக அறிய முடிகிறது.
இந்திய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் முறையான ஆராய்ச்சிகளின் பின் தாராளமாக கிடைக்கும் இவற்றை எமது உள்நாட்டில் சந்தைகளுக்கென உற்பத்தி செய்வதை அரசாங்கம் அங்கீகரிப்பதானது, பயிர் பாதுகாப்பை அதிகரித்து, இடுபொருள் செலவைக் குறைத்து, இயற்கை விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு நிச்சயம் உயர்த்தும்.
மேலதிக விபரங்களுக்கு:
📞 CSJ Agri
📱 076 225 0017
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Yield-Enhancing Mycorrhiza
Mycorrhiza (VAM) — Enhancing Rice Root Growth, Drought Tolerance, and Phosphorus Absorption for Higher Yields
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
In recent times, young farmers have shown great interest in achieving higher yields at lower costs. As the prices of “quality” chemical fertilizers continue to rise, biofertilizers have become a sustainable alternative — helping to preserve soil fertility and reduce fertilizer expenses. By incorporating biofertilizers into an integrated nutrient management system, not only does soil fertility improve, but the environment is also protected.
This VAM biofertilizer is a natural blend prepared using beneficial microorganisms.
VAM (Vesicular Arbuscular Mycorrhiza) is a soil-borne fungal inoculant that forms a symbiotic relationship with plant roots. It plays a vital role in helping plants absorb nutrients more effectively.
Benefits of VAM:
🍃
Through its extensive root network, VAM dissolves insoluble phosphorus present in the soil, making it available for plant uptake. The fungal hyphae spread densely through the roots and soil, extending far beyond the root zone to absorb phosphorus, other nutrients, and water — acting like tiny pipelines delivering them directly to plant cells.
🍃
It helps fix atmospheric nitrogen in the soil. Therefore, VAM enables crops to absorb major nutrients such as Nitrogen (N), Phosphorus (P), Potassium (K), and micronutrients like Copper, Manganese, Iron, Cobalt, and Molybdenum.
🍃
It protects plants from soil-borne pathogens and nematodes by forming a protective layer around the roots. As the fungus colonizes the root zone, it prevents disease-causing fungi and nematodes from attacking plant roots.
Moreover, it helps save up to 25% of phosphorus fertilizer costs and boosts crop yields by 10–15%. It also enhances nodule formation and nitrogen fixation efficiency in crops.
🍃
It promotes the growth of trees right from the seedling stage, increasing their girth and strength.
🍃
It improves the soil’s water-holding capacity and protects crops during periods of drought and flooding.
Application in Paddy Cultivation:
- Use 2 liters per acre (350 ml per 16-liter tank).
- For organic farming, apply on the 3rd day; for chemical farming, apply on the 14th day.
- For seedlings grown in grow bags, use 10 grams of VAM per bag.
- For 1,000 kg of compost mixture, mix 3 kg of VAM.
Recommended Crops:
🍃🍃🍃🍃
Paddy, vegetables, fruit crops, tree saplings, hill country plantation crops, nursery plants, and all other agricultural crops.
Storage and Precautions:
🍃🍃🍃🍃
- Store biofertilizers in a cool, dry place, away from direct sunlight.
- Do not mix with chemical fertilizers, herbicides, pesticides, or fungicides.
- Biofertilizers work best in soils rich in organic matter or farmyard manure.
- It is best to apply in the evening hours.
Use of VAM in Sri Lanka:
🍃🍃🍃🍃🍃🍃🍃🍃
A success story was recorded on May 2, 2024, in Malwatte, Ampara District, where a teacher and paddy farmer increased his yield from 28 to 35 bags per acre by applying VAM along with chemical fertilizers at regular intervals.
Seed paddy producers in the Ampara and Sammanthurai regions have been successfully using VAM in combination with chemical fertilizers for the past few years.
Farmers in Kilinochchi and Vavuniya districts have also been using VAM for several years. In Sri Lanka, it is widely used in the production of export-oriented vegetables and fruits in the Central, North Western, and North Central Provinces.
Furthermore, many Northern Province farmers have long been using it in onion and vegetable cultivation.
After extensive research in India and Europe, VAM has become widely available. Government approval for its local production for domestic markets will undoubtedly help improve crop protection, reduce input costs, and advance sustainable organic farming to the next level.
For more information:
📞 CSJ Agri
📱 076 225 0017