Career Fit and IT Trainees’ Report Submission Event
Career Fit and IT Trainees’ Report Submission Event

career fit and IT பயிலுனர்களுக்கான அறிக்கை சமர்ப்பிக்கும் நிகழ்வு

பின்தங்கிய கிராமங்களில் Career Fit and IT Trainees’ Report Submission Event வசிக்கும் மாணவர்கள், பாடசாலை கல்வியில் இருந்து இடை விலகியவர்களுக்கு அடிப்படை கணணி அறிவினை வழங்கி அவர்களையும் எதிர் காலத்தில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்காக அடிப்படை கணணி அறிவினை வழங்கும் நோக்குடன் career fit and IT பாடநெறியானது Sponsorship அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் career fit and IT பாடநெறியினை பூர்த்தி செய்த batch 5, batch 6 பயிலுனர்களுக்கான Field visit தொடர்பான அறிக்கையினை சமர்பித்தல் நிகழ்வானது 18-11-2025 சனிக்கிழமை அன்று கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பயிலுனர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களில் கட்டமைப்பு அதன் செயற்பாடுகள் மற்றும் அங்கு காணப்படும் கற்கைநெறிகள் பற்றிய விடயங்களை மிகத்தெளிவான முறையில் சமர்ப்பித்தமை குறிப்பிடதக்கவிடயமாகும்.

மேலும் batch- 5 இல் இருந்து 22 பயிலுனர்களும், batch- 6 இல் இருந்து 12 பயிலுனர்களும் Field visit தொடர்பான அறிக்கையினை சமர்பித்தனர்.

இதன் போது கல்லூரியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், கல்லூரி முதல்வர் திரு.சந்திரசேகரம், கல்லூரியின் வளவாளர்கள் கலந்துகொண்டனர்.

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் உரிய வழிகாட்டல்கள் இன்மையினால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாய நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில், இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை சமூகத்தின் மத்தியில் சாதனையாளர்களாக மாற்றுவதில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி தசாப்தம் கடந்த சேவையினை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Career Fit and IT Trainees’ Report Submission Event
Career Fit and IT Trainees’ Report Submission Event
Career Fit and IT Trainees’ Report Submission Event

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Career Fit and IT Trainees’ Report Submission Event

The Career Fit and IT training programme is being conducted on a sponsorship basis with the objective of providing basic computer knowledge to students living in underprivileged villages and to those who have dropped out of school. This aims to equip them with essential digital skills and create opportunities for future employment.

In this context, the report submission event related to the field visit for Batch 5 and Batch 6 trainees who completed the Career Fit and IT course at the Vivekananda Technical College in Puthukudiyiruppu, Batticaloa, was held at the college on Saturday, 18.11.2025.

During this event, the trainees presented detailed reports on the structure, functioning, and educational programmes available in government and non-government organizations within the Batticaloa district. Their clear and thorough presentations were notable.

Furthermore, 22 trainees from Batch 5 and 12 trainees from Batch 6 submitted their field visit reports.

The event was attended by the college’s Executive Director, Mr. K. Pratheeswaran, the Principal, Mr. Chandrasekaram, and the college facilitators.

In the rapidly advancing technological era, many youths face the risk of an uncertain future due to the lack of proper guidance—an issue that needs serious attention.

In this regard, Vivekananda Technical College has been rendering a remarkable service for over a decade by providing appropriate guidance to young people, enhancing their skills, and transforming them into achievers within society.