Expert Resource Team
Expert Resource Team

மட்டக்களப்பில் அமிர்தா நிபுணத்துவ வளவாளர் குழாம் உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இளைஞர்களிற்கு வேலை அனுபவம் மற்றும் தொழில்முயற்சியாளர்களின் முன்னேற்றம் போன்ற விடயங்களை கருத்தில் கொண்டு நிதி நிருவாக மேலாண்மை மற்றும் கணினி தொழில்நுட்ப சேவைகள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொண்டு வரும் அமிர்தா நிறுவனத்தின் மற்றுமொரு சிறந்த சேவையாக அமிர்தா நிபுணத்துவ வளவாளர் குழாம் (Amirda Resource Hub) உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 2025.06.07 ஆம திகதி இன்று நடைபெற்றது.

இந்தக் குழாம், தொழில்துறை, கல்வி, தகவல் தொழில்நுட்பம், சமூக அபிவிருத்தி, விவசாயம், நிறுவன மேலாண்மை, வழிகாட்டலும் ஆற்றுப்படுத்தலும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது.

இந்த கலந்துரையாடலில், குழாம் உருவாக்கத்தின் நோக்கம், அதன் முக்கிய பங்களிப்புகள், எதிர்நோக்கும் திசைகள் மற்றும் செயற்பாட்டு திட்டங்கள் குறித்து VCOT நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் மற்றும் அமிர்தா தலைமை நிறைவேற்று அதிகாரி த.புவிகரன் ஆகியோரினால் விரிவாக தெரிவூட்டப்பட்டது.

தற்போதைய காலசூழ்நிலை மாற்றம், சமூக. பொருளாதார முன்னேற்றத்துடன் திறமைகளுக்கு கைகொடுத்தல், போன்ற செயற்பாடுகளினால் மாவட்டத்தின் மேம்பாட்டில் தாக்கத்தை உருவாக்கும் நோக்கத்தில் அமிர்தா சமூக நிறுவனம் இந்த நிபுணத்துவ வளவாளர் குழாமை கட்டமைக்கிறது.

இதன் மூலமாக

  • துறை சார்ந்த பயிற்சி, வழிகாட்டல், மற்றும் ஆலோசனைகள் மூலம் சமூகத்திற்கும் வணிகத்துறைக்கும் திறன் மேம்பாடு வழங்கப்படும்.
  • இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் நோக்கம் வலுவூட்டப்படும்.
  • சமூக மாற்றத்திற்கான உந்துதல் மற்றும் நிபுணத்துவம் மிக்க திறமையான நபர்களின் பங்களிப்பு பல்வேறுபட்ட தளங்களில் விரிவுபடுத்தப்படும்.
  • இந்த கலந்துரையாடல் மூலம் குழாம் வடிவமைப்பில் பங்கேற்க விரும்பும் நிபுணர்களுக்கான பதிவு மற்றும் செயற்பாட்டு முறைமைகள் பற்றியும் விரிவாக பேசப்பட்டது.

“Connecting Talent, Creating Impact” என்ற கோட்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு முக்கியக் கட்டமாக அமையும் என நம்பப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Discussion on the Formation of Amirda Expert Resource Team in Batticaloa

Taking into consideration the need to provide work experience for youth and support the growth of entrepreneurs in the Batticaloa district, a discussion was held today, June 7, 2025, regarding the formation of another key initiative by the Amirda organization, which has been delivering various services such as financial management and IT services — the Amirda Expert Resource Team (Amirda Resource Hub).

This team is being formed with the aim of bringing together trainers, consultants, and domain experts with experience and expertise across a range of fields, including industry, education, information technology, social development, agriculture, organizational management, mentoring and empowerment, sales, and marketing.

During this discussion, Mr. K. Pratheeswaran, Executive Director of VCOT, and Mr. T. Puvikaran, Chief Executive Officer of Amirda, provided detailed explanations about the purpose of the team’s formation, its key contributions, future directions, and implementation plans.

In response to the evolving contemporary context, and with the goal of contributing to district development through social and economic progress and talent empowerment, the Amirda Social Organization is establishing this expert resource team.

Through this initiative:

  • Capacity development will be offered to both the community and the business sector through sector-specific training, guidance, and consultation.
  • Career guidance, job opportunities, and entrepreneurship development for youth will be strengthened.
  • The contribution of highly skilled and knowledgeable individuals will be expanded across various domains to drive social transformation.
  • The discussion also covered registration procedures and operational mechanisms for experts interested in participating in the team’s formation.

This initiative, carried forward under the theme “Connecting Talent, Creating Impact,” is expected to become a significant step toward the social and economic advancement of the district.

For more news Maatram News