அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான புது வருடக் கொண்டாட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் 2025 ஆம் ஆண்டின் புது வருட நிகழ்வு 01.01.2025 திகதி சிறப்பாக இடம் பெற்றது.

அன்றைய நிகழ்வில் நிலையத்தின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் அவர்களும், செயலாளர் திரு. மேகநாதன் அவர்களுடன் முகாமையாளர் திருமதி. ஜனனி ஜனகன்அத்துடன் பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

அன்னை ஶ்ரீ சாரதா நிலையம் இந்த வருடத்துடன் சிறப்பான முறையில் தனது 04 வருட சேவையினை பூர்த்தி செய்து 60 இற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஒரு அடைக்கல இல்லமாக திகழ்கின்றது. இந்த மாணவிகளுக்கு சிறப்பான கல்வியினை வழங்குவது மட்டுமல்லாது அவர்களின் மேலதிக திறன் மேம்பாட்டு செயற்பாடுகளான விளையாட்டுக்கள், சிலம்பு, யோகா மற்றும் தற்காப்பு கலையான கராத்தே என்பனவும் வழங்கப்பட்டு வருகின்றது.

எதிர்காலத்தில் சிறந்த ஆளுமைமிக்க மாணவிகளை உருவாக்கும் இந்த அன்னை ஶ்ரீ சாரதா நிலையத்தின் செயற்பாடுகளிற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள், மற்றும் உள்ளூர் நல்லுள்ளங்கள் ஆகியோர் வழங்கி வருகின்றனர். அத்துடன் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் அனுசரணையுடன் தொடர்ச்சியாக இந்நிலையம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் மலர்கின்ற இந்த 2025 ஆம் ஆண்டை வரவேற்கும் முகமாக அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய வருடத்தினை வரவேற்றும் நிகழ்வில் வந்திருந்தோரின் வாழ்த்துக்களுடன் பிரசாதம் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் மாணவிகள் சந்தோசமாக இந்த வருடத்தினை வரவேற்றனர்.

New Year Celebration at Annai Sri Sarada Centre-2025

The 2025 New Year celebration at Annai Sri Saradha Centre, located in the Veṇāvil area of Puthukudiyiruppu, Mullaitivu, was grandly held on January 1, 2025.

The event was graced by the presence of the institution’s president, Mr. Pon. Perinbanayagam, secretary Mr. Mekanathan, manager Mrs. Janani Janakan, along with staff members, teachers, and students, who all participated enthusiastically.

Achievements of Annai Sri Sarada Nilayam:

  • With this year, the institution marks its 4th year of service, providing a safe shelter for over 60 girls.
  • In addition to offering quality education, the girls are also trained in skill development activities such as sports, Silambam (a traditional martial art), yoga, and self-defense techniques like karate.

Support for the Institution’s Activities

  • The activities of Annai Sri Saradha Nilayam are supported by expatriate well-wishers abroad and benevolent individuals locally.
  • With the consistent support of the Vivekananda Community Trust, the institution continues to function effectively.

Highlights of the Event

To welcome the blooming year of 2025, everyone gathered together to celebrate. The event included the exchange of greetings, distribution of prasadam (blessed food), and snacks. The students joyfully embraced the New Year, marking the occasion with happiness and enthusiasm.

For more information visit to