national badminton tournament

அகில இலங்கை திறந்த தேசிய பெட்மிண்டன் சுற்றுப்போட்டியில் தங்கப்பதக்கம்

அகில இலங்கை திறந்த தேசிய பெட்மிண்டன் சுற்றுப்போட்டி மட்டக்களப்பில் நடைபெற்றது. இதனை அகில இலங்கை பெட்மிண்டன் சங்கமும், கிழக்கு மாகாண பெட்மிண்டன் சங்கமும் இணைந்து நடாத்தியது.

நடத்தப்பட்ட தேசிய ரீதியான போட்டியிலே 70 வயதுக்கு மேற்பட்ட ஆடவருக்கான போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்குபற்றிய திரு.தங்கவேல் சந்திரசேகரம் அவர்கள் அகில இலங்கை ரீதியில் சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டு தங்கப்பதக்கத்தினை சுவீகரித்தார்.

இவர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரும் ஓய்வுபெற்ற அதிபரும், தற்போது புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் முதல்வராக கடமையாற்றி வருகின்றார்.

இவர் விளையாட்டு, சாரணியம் என எந்த விடயங்களையும் இன்றுவரை இளமைத்துடிப்புடன் செயற்படுத்திக்கொண்டிருப்பதோடு பல்வேறு சாதனைகள், வெற்றிகளை பெற்று தற்போதும் கூட தேசிய ரீதியான இந்த சாதனையினை நிகழ்த்தியிருக்கிறார்.

அவரின் மனிதாபிமான சிந்தனைகள் கற்பித்தலை ஒரு சேவையாக எந்தவித எதிர்பார்ப்புமின்றி தன்னலமற்ற சேவையாற்றி வருகிறார். ஒரு சுறுசுறுப்பான இளைஞனாக இளைஞர் குழாமுடன் ஆசிரியராக, நண்பராக, வழிகாட்டியாக பல்வேறு பாத்திரங்களுடன் தொடர்ச்சியாக பயணித்து வரும் திரு.த.சந்திரசேகரம் அவர்களுக்கு மாற்றம் செய்திகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

Champion’s Glory: A Stellar Victory in the All-Island Open National Badminton Tournament

The All-Island Open National Badminton Tournament recently concluded in Batticaloa, a prestigious event organized by the All-Island Badminton Association in collaboration with the Eastern Province Badminton Association. The tournament brought together top badminton players from across the country, competing for national recognition and excellence.

Amidst intense competition, Mr. Thangavel Chandrasekaram displayed remarkable skill and determination in the 70+ men’s category. Representing Batticaloa District, he emerged as the National Champion, securing the gold medal and earning a well-deserved place in the spotlight.

A Life of Dedication and Excellence

Beyond his achievements in sports, Mr. Chandrasekaram is a distinguished English lecturer at Eastern University, a retired school principal, and currently serves as the Principal of Vivekananda College of Technology in Puthukudiyiruppu. His lifelong commitment to education, leadership, and mentorship has shaped the lives of many students and professionals.

A Champion Beyond the Court

His contributions extend far beyond the badminton court. As a passionate advocate for sports, scouting, and youth development, he has continuously demonstrated his dedication to personal growth and community service. His ability to balance excellence in multiple fields while maintaining an energetic and inspiring presence makes him a true role model.

This latest national victory is not just a personal triumph but a testament to his perseverance and passion, proving that dedication and hard work lead to success at any stage of life.

From the classroom to the badminton court, from an educator to a champion, his journey reflects commitment, discipline, and determination.

On behalf of Maatram News, we extend our heartfelt congratulations to Mr. Thangavel Chandrasekaram on this outstanding achievement. His story will continue to inspire many more successes in the future.

For more news visit https://maatramnews.com/