ஆரோக்கியமான குலோப் ஜாமுன் செய்வது எப்படி

ஆரோக்கியமான குலோப் ஜாமுன் செய்வது எப்படி

குலோப் ஜாமுன் என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு பிரபலமான இனிப்பு பலகாரம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து சாப்பிடும் இந்த இனிப்பை, வீட்டிலேயே எளிதாகவும் ஆரோக்கியமாகவும் தயாரிக்கலாம். பொதுவாக கடைகளில் கிடைக்கும் மாவுகளை பயன்படுத்தாமல், சர்க்கரை வள்ளிக்கிழங்கை கொண்டு செய்தால் சுவையும் சத்தும் அதிகமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – ½ கிலோ

பால் பவுடர் – ¼ கப்

கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்

நாட்டு சக்கரை – 1½ கப்

தண்ணீர் – 1½ கப்

ஏலக்காய் தூள் – ¼ டீஸ்பூன்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி இட்லி சட்டியில் வைத்து சுமார் 10 நிமிடம் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு ஆறவிட்டு தோலை நீக்கி மென்மையாக மசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் நாட்டு சக்கரை மற்றும் தண்ணீரை சேர்த்து அடுப்பில் வைத்து, சக்கரை முழுவதும் கரையும் வரை காய்ச்சுங்கள். பிறகு அதை வடிகட்டி, வேறொரு பாத்திரத்தில் மாற்றி ஏலக்காய் தூளை சேர்த்து சர்க்கரைச் சீராவை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பால் பவுடர் மற்றும் கோதுமை மாவை சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைய வேண்டும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடாக்குங்கள். எண்ணெய் சூடானதும் உருண்டைகளை போட்டு, மெதுவாக கிளறி பொன்னிறமாகும் வரை பொரிக்க வேண்டும். நன்றாக பொரிந்ததும் அவற்றை உடனே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைச் சீராவில் போட்டு விடுங்கள்.

சுமார் இரண்டு மணி நேரம் சீராவில் நன்றாக ஊறிய பிறகு பரிமாறலாம்.

இதோ, மிகவும் சுவையானதும் சத்தானதுமான குலோப் ஜாமுன் வீட்டிலேயே எளிதாக தயாராகிவிடும்.

How to Make Healthy Gulab Jamun at Home

Gulab jamun is a popular sweet loved by people of all ages, from children to adults. This delicious dessert can be prepared easily at home in a healthy way by using sweet potatoes instead of store-bought mixes. Sweet potatoes not only add natural sweetness but also increase the nutritional value of the dish.

Ingredients:

  • Sweet potato – ½ kg
  • Milk powder – ¼ cup
  • Wheat flour – 2 tablespoons
  • Jaggery – 1½ cups
  • Water – 1½ cups
  • Cardamom powder – ¼ teaspoon
  • Oil – as required for deep frying

Method:

First, wash the sweet potatoes well and cut them into small pieces. Steam them in an idli cooker or steamer for about 10 minutes until they are well cooked. Allow them to cool, remove the skin, and mash them smoothly.

In a separate pan, add jaggery and water and heat until the jaggery dissolves completely. Strain the syrup into another vessel and add cardamom powder. Keep the syrup ready.

To the mashed sweet potato, add milk powder and wheat flour. Mix well and knead into a soft dough similar to chapati dough. Make small, smooth balls from the dough.

Heat oil in a deep pan over low to medium heat. Once the oil is hot, gently add the balls and allow them to cook slowly. Stir occasionally and fry until they turn golden brown.

Remove the fried jamuns and immediately soak them in the prepared jaggery syrup. Let them soak for about two hours so they absorb the syrup well.

Delicious and nutritious gulab jamuns are now ready to be served.