உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு செயலமர்வு

உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விழிப்புணர்வு செயலமர்வு

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் தொழில்நுட்ப கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக மட்/வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயாலயத்தில் உயர்தரப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மேலும் அவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பிலான விளிப்புணர்வை இதன்போது பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் அமைய பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.