எல்லாத் தன்மையிலும் குழம்பு வைத்து விடுவார்கள் சிலர், ஆனால் ரசம் மட்டுமே சவாலாக உணரப்படலாம். ரசம் வைத்தால் அது அப்படியே குடிக்கும்படி ருசியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. எத்தனை வீடியோக்கள் பார்த்தாலும் சரியான சுவை வரவில்லை என்று நினைப்பவர்கள் – இந்த முறையை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வீட்டு அனைவரும் பாராட்டுவார்கள்!
இந்த பதிவில் சுவைமிக்க தக்காளி ரசம் செய்வது எப்படி என்பதை எளிமையாக பார்க்கலாம்.
தக்காளி ரசம் செய்ய தேவையான பொருட்கள்
- பழுத்த தக்காளி – 2
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- தனியா விதை – 1½ டீஸ்பூன்
- சீரகம் – 1½ டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 1
- பூண்டு – 10 பல்
- வெந்தயம் – 10
- பெருங்காயத்தூள் – ¼ டீஸ்பூன்
- மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – ½ டீஸ்பூன்
- கருவேப்பிலை – ஒரு கொத்து
- பச்சை மிளகாய் – 2 (கீறியது)
- வரமிளகாய் – 1
தக்காளி ரசம் செய்வது எப்படி?
- புளி நீர் தயாரித்தல்
புளியை சுத்தமாக அலசி தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும். - ரசப் பொடி அரைத்தல்
மிக்ஸரில் குறிப்பிட்ட தனியா, சீரகம், மிளகு, வரமிளகாய், வெந்தயம் சேர்த்து லேசாக அரைக்கவும்.
மிக மென்றதாக அரைக்க வேண்டாம்; கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
பிறகு தோலுடன் கூடிய பூண்டு பற்களைச் சேர்த்து ஒரு சுற்று மட்டும் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும். - தக்காளி பிசை தயாரித்தல்
தக்காளியை நன்றாக கழுவி நறுக்கி புளி நீரில் பிசையவும்.
இதில் கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இதிலேயே மஞ்சள்தூள் சேர்க்கவும். - தாளித்தல்
வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு போட்டுப் பொறிக்க விடவும்.
பின் கருவேப்பிலை, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் மீது முன் தயார் செய்த ரசப் பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விடவும். - ரசம் தயாரித்தல்
இப்போது புளி-தக்காளி நீரை ஊற்றி தேவையான உப்பு சேர்க்கவும்.
ஒரு பக்கத்தில் நுரை குறைந்து கொதிக்கத் தொடங்கும் போது அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.
இறுதியாக பெருங்காயத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.
How to Make Tomato Rasam?
Some people can easily prepare any type of curry, but rasam is something they often find challenging. Everyone wishes to make rasam so flavorful that it can be enjoyed as a drink by itself. If you have watched many videos but still can’t get the perfect taste, try this method once — your family will surely appreciate it!
In this post, let’s learn an easy and tasty way to prepare delicious tomato rasam.
Ingredients Needed for Tomato Rasam
- Ripe tomatoes – 2
- Tamarind – small gooseberry-sized
- Coriander leaves – a handful
- Curry leaves – one sprig
- Coriander seeds – 1½ teaspoons
- Cumin seeds – 1½ teaspoons
- Black pepper – 1 teaspoon
- Dry red chilli – 1
- Garlic – 10 cloves
- Fenugreek seeds – 10
- Asafoetida powder – ¼ teaspoon
- Turmeric powder – ¼ teaspoon
- Salt – as required
For Tempering:
- Oil – 1 teaspoon
- Mustard seeds – ½ teaspoon
- Curry leaves – one sprig
- Green chillies – 2 (slit)
- Dry red chilli – 1
How to Make Tomato Rasam?
1. Preparing Tamarind Water
Clean the tamarind and soak it in water.
2. Grinding the Rasam Powder
Add coriander seeds, cumin, pepper, dry red chilli, and fenugreek seeds to a mixer and grind coarsely.
Do not grind it too fine; it should remain slightly coarse.
Add garlic cloves with skin and pulse once. Set the mixture aside.
3. Preparing the Tomato Mix
Wash and chop the tomatoes, then mash them well in the tamarind water.
Add curry leaves and chopped coriander leaves and mix well.
Add turmeric powder to this mixture.
4. Tempering
Heat oil in a pan.
Add mustard seeds and let them splutter.
Add curry leaves, dry red chilli, and green chillies and sauté.
Now add the prepared rasam powder and sauté for one minute.
5. Making the Rasam
Pour the tamarind-tomato mixture into the pan and add salt.
When the rasam starts to foam slightly on one side and begins to boil, add half a cup of water.
Finally, add asafoetida powder and sprinkle coriander leaves. Turn off the heat.

