தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்!

தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் “ஃபெங்கால்” என்ற சூறாவளி புயல் இன்று அதிகாலை 05.30 மணியளவில் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கே 340 கிமீ தொலைவிலும் திருகோணமலைக்கு வடக்கே 400 கிமீ தொலைவிலும் நிலைகொண்டது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை புயலாக வட தமிழ்நாடு-புதுச்சேரி கரையை கடக்க வாய்ப்புள்ளது. தீவின் வானிலையில் இந்த அமைப்பின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மாலை அல்லது இரவில் தீவின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-55) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.