தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலையானது அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.
தேங்காய் ஒன்று தற்போது 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் நகர்ப்புறங்களை அண்மித்த பகுதிகளில் குறைந்த விலையில் தேங்காய் விற்பனை செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தைஆரம்பிக்கவுள்ளதாகத் அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒவ்வொறு ஆண்டும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்காய் உற்பத்தி குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் உள்ளூர் தேங்காய் நுகர்வுக்கு முக்கிய வாய்ப்பு அளிக்கப்பட்டு ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
தேங்காய் ஏலத்தில், தற்போது இந்த நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவாக உள்ளது.ஆனால், இதன் விலை 170, 180 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Posted inNews