உலகெங்கிலும் உள்ள பூனைகளில் பாதிக்கும் மேற்பட்டவை அதிக எடையுடன் இருப்பதாக விலங்கு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பருமனான பூனைகளுக்காக, ஒசெம்பிக் (Ozempic) மருந்தின் பூனைகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஒரு வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
செல்லப்பிராணிகளுக்கான மருந்துகளை வழங்கும் நிறுவனம் ஒன்று, இந்த மருந்து தொடர்பாக நடத்திய முதல் மருத்துவப் பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த மருந்து, பூனைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான முதுமையைத் தூண்டவும், மற்றும் பூனைகளுக்குக் கிடைக்கும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆயுளை நீடிக்கும் சிகிச்சையாகவும் இருக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த மருந்து, உடல் எடையைக் குறைப்பதைத் தவிர, நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற பொதுவான நோய்களுக்கும் தீர்வுகளை வழங்கும் இதன் மூலம் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியமான முதுமைக்கும் உதவ முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை வெற்றியடைந்தால், சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் ஒரு பெரிய பரிசோதனையைத் தொடங்கவும், விரைவில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் ஒப்புதல் கோரவும் திட்டமிட்டுள்ளது.
இந்த மருந்து 2028 அல்லது 2029 ஆம் ஆண்டிலேயே கிடைக்கப்பெறும் என்று நிறுவனம் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
New Drug That Could Extend the Lifespan of Cats
Animal experts have found that more than half of the cats around the world are overweight.
For these obese cats, foreign media report that a cat-specific version of the drug Ozempic has been introduced.
A company that supplies medicines for pets has announced that the first clinical trial conducted on this drug has been successful.
It is said that this medication has the potential to improve the quality of life of cats, promote healthy aging, and become one of the most impactful lifespan-extending treatments available for cats.
In addition to reducing body weight, the drug is also expected to help address common conditions such as diabetes and kidney disease, thereby supporting longer lifespans and healthier aging.
If the trials continue to be successful, the relevant pharmaceutical company plans to launch a large-scale trial and soon seek approval from the U.S. Food and Drug Administration (FDA).
The company reportedly expects the drug to become available by 2028 or 2029.

