2024 ஆம் ஆண்டுக்கான சிறு போக பெரிய வெங்காயத்தின் அறுவடை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 1500 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் படி, இந்த நாட்களில் பெரிய வெங்காய அறுவடையை விவசாயிகளிடமிருந்து தற்போது கொள்வனவு செய்து வருவதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
பெரிய வெங்காயச் செய்கையின் ஆரம்பத்தில் மழையினால் சேதம் ஏற்பட்டிருந்த போதிலும் விவசாயத் திணைக்களம் மற்றும் மாகாண விவசாய திணைக்களத்தின் தீவிர ஈடுபாட்டினால் பயிர்ச்செய்கை வெற்றியளித்ததாக பெரிய வெங்காய பயிர்செய்கை தலைவர் உதவி விவசாயப் பணிப்பாளர் டி.ஆர். காஞ்சனா கூறியுள்ளார்.
விவசாயத் திணைக்களத்தின் பெரிய வெங்காய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், புதிய பயிர்ச் செய்கைக்கு ஏற்ற இடங்கள் கண்டறியப்பட்டு, 2025 ஆம் ஆண்டுக்கான ஏலப் பருவத்தில் 2000 ஹெக்டேருக்கு மேல் விவசாயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெங்காய விலை ஏற்றத்தாழ்வுகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.