பல விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலங்கையின் உள்நாட்டு தேசிய விமான நிறுவனமான, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பல விமான சேவைகள் அண்மைய நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு தற்காலிகமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உணவு மற்றும் ஹோட்டல் தங்குமிட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Posted inNews