உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்
உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்

உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்

உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்

ஒரு தலைவர் உத்திசார்ந்த சிந்தனை (Strategic Thinking) இல்லாமல் இருந்தால், அவர் குழுவை நாளைய வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியாது.

தலைமைத்துவம் என்பது தினசரி முடிவுகளை எடுப்பதற்கான திறமையை மட்டுமல்ல அது நீண்டகால காட்சி (Vision) மற்றும் நிலையான முன்னேற்றத்தை உருவாக்கும் திறன்.
இதற்கான அடிப்படை தான் உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 முக்கிய கொள்கைகள்.

உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்

1>தகவல்களை திறந்தவிடு (Be Honest and Open about Information)

  • தகவல் மறைக்கப்படும் போது குழுவில் நம்பிக்கை குறையும்.
  • திறந்த தகவல் பகிர்வு, வெளிப்படைத்தன்மையை வளர்க்கும்.
    Case Study: ஒரு வங்கி, பணியாளர்களுடன் நிறுவன நிதிநிலை பற்றிய தகவல்களை பகிர்ந்ததால், ஊழியர்களின் உறுதி அதிகரித்தது.

2>பொறுப்புகளை பகிர்ந்துகொள் (Distribute Responsibility)

  • தலைவர் அனைத்தையும் தானே செய்யக் கூடாது.
  • ஒவ்வொரு உறுப்பினருக்கும் பொறுப்புகளை பகிர்ந்து கொடுத்தால், அவர்கள் வளர்ச்சியடைவார்கள்.
    உதாரணம்: ஒரு NGO தலைவர், திட்டங்களை தனது குழுவினருக்கு ஒப்படைத்து, அவர்கள் முன்னேற்றத்தை கண்காணிப்பது.

3>பல்வேறு யோசனைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கு (Create Multiple Paths for Ideas)

  • ஒரே மனிதரின் யோசனை போதாது.
  • அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை கொடுத்தால், சிறந்த முடிவுகள் உருவாகும்.
    இன்றைய பயன்பாடு: Suggestion Box, Google Form Feedback.

4>தோல்விக்கு இடமளி (Make it Safe to Fail)

  • தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி.
  • தோல்வியை தண்டிப்பது படைப்பாற்றலை அழிக்கிறது.
    Case Study: Google “20% time policy” – பணியாளர்கள் தங்கள் நேரத்தின் 20% தனிப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்த அனுமதி. Gmail, Google Maps ஆகியவை இதிலிருந்து உருவானவை.

5>பிற உத்திசார்ந்த தலைவர்களுடன் தொடர்பு கொள் (Provide Access to Other Strategists)

  • ஒரு தலைவர் தனிமையில் வளரமுடியாது.
  • பிற தலைவர்களுடன் இணைந்து கற்றுக்கொள்ள வேண்டும்.
    உதாரணம்: தொழில் சங்கங்கள், மாநாடுகள், பயிற்சிகள்.

6>அனுபவத்தின் மூலம் கற்றல் வாய்ப்புகளை உருவாக்கு (Develop Experience-Based Learning)

  • புத்தக அறிவு மட்டும் போதாது.
  • அனுபவத்திலிருந்து கற்றல் மிகப் பெரிய பலனை தரும்.
    Case Study: சமூகப் பணி மாணவர்கள், நேரடி புலப் பயிற்சியில் கலந்து கொள்வதால், வகுப்பறையில் கற்றவற்றை நடைமுறைப்படுத்த கற்றுக்கொள்கிறார்கள்.

7>மாற்றத்திற்கு ஏற்ற ஆட்களை நியமி (Hire for Transformation)

  • சான்றிதழ்களை கருத்தில் கொண்டோ அல்லது திறமைகளை மட்டு வைத்துக்கொண்டோ ஆட்களை வேலைக்கு அமர்த்த முடியாது, மாற்றத்தை ஏற்படுத்தும் மனப்பாங்குடையவர்களும் தேவை.
    உதாரணம்: ஒரு நிறுவனம், அனுபவமில்லாதவராக இருந்தாலும் புதுமை சிந்தனையுடன் இருக்கும் நபரை நியமித்தது அவர் நிறுவனம் புதிய சந்தைகளில் வளர உதவினார்.

8>உன்னுடைய முழு மனிதத்தன்மையை வெளிப்படுத்து (Bring Your Whole Self to Work)

  • தலைவர்கள் தங்களை உண்மையாக வெளிப்படுத்த வேண்டும்.
  • பாசாங்கான தலைமைத்துவம் நீண்ட நாள் நிலைக்காது.
    Case Study: ஒரு பள்ளி முதல்வர், மாணவர்களிடம் தன் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்ததால், மாணவர்கள் அவரை “மனிதத் தன்மையுள்ள தலைவர்” எனப் பாராட்டினர்.

9>சிந்திக்க நேரமிடு (Find Time to Reflect)

  • அன்றாட வேலையில் மூழ்கி விட்டால், பெரிய காட்சியை (Big Picture) காண முடியாது.
  • சிந்தனை மற்றும் சுயவிமர்சனம் ஒரு தலைவருக்கு அவசியம்.
    இன்றைய பயன்பாடு: தினமும் 15 நிமிடம் “Reflection Journal” எழுதுவது.

10>தலைமைத்துவ வளர்ச்சியை தொடர்ச்சியான பயிற்சியாகக் கருது (Recognize Leadership as Ongoing Practice)

  • தலைமைத்துவம் ஒரு இலக்கு அல்ல; அது ஒரு பயணம்.
  • தொடர்ந்து கற்றல், மாற்றம், புதுமை ஆகியவை அவசியம்.
    Case Study: Steve Jobs தனது வாழ்க்கை முழுவதும் புதிய சிந்தனைகளை கற்றுக்கொண்டு Apple-ஐ மாற்றினார்.
உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள்

உத்திசார்ந்த தலைமைத்துவத்தின் 10 கொள்கைகள், ஒரு தலைவரை குறுகியகால வெற்றியிலிருந்து நீண்டகால மாற்றத்திற்கு அழைத்துச் செல்கின்றன.

ஒரு தலைவர் இக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அவர் தனது நிறுவனத்தையும், சமூகத்தையும், நாட்டையும் முன்னேற்றம் செய்ய முடியும்.

முக்கிய 8 தலைமைத்துவ கருவிகள் என்ற தொடர் கட்டுரையின் கடந்த பகுதியினை படிக்க
https://maatramnews.com/articles/six-questions-to-make-meetings-more-effective/

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

10 Principles of Strategic Leadership

A leader without strategic thinking cannot lead a team toward tomorrow’s success.

Leadership is not just about making daily decisions — it’s about having a long-term vision and creating sustainable growth.
The foundation of that growth lies in these 10 key principles of strategic leadership.


1️⃣ Be Honest and Open about Information

When information is hidden, trust within the team erodes.
Open communication fosters transparency and collaboration.
Case Study: A bank that shared its financial status with employees saw increased trust and commitment among staff.


2️⃣ Distribute Responsibility

A leader should not try to do everything alone.
Sharing responsibilities helps team members grow and develop ownership.
Example: An NGO leader delegates projects to team members while monitoring their progress.


3️⃣ Create Multiple Paths for Ideas

A single person’s ideas aren’t enough.
Encourage everyone to contribute ideas for better outcomes.
Modern Practice: Suggestion boxes or Google Forms for employee feedback.


4️⃣ Make it Safe to Fail

Failure is a vital part of learning.
Punishing mistakes kills creativity.
Case Study: Google’s “20% Time Policy” allowed employees to spend 20% of their time on personal projects — leading to innovations like Gmail and Google Maps.


5️⃣ Provide Access to Other Strategists

A leader cannot grow in isolation.
Connecting with other leaders encourages learning and inspiration.
Example: Attending industry associations, conferences, and leadership workshops.


6️⃣ Develop Experience-Based Learning

Book knowledge alone isn’t enough.
Practical experience provides deeper understanding.
Case Study: Social work students who engage in fieldwork learn to apply classroom theories to real-life scenarios.


7️⃣ Hire for Transformation

Hiring should go beyond qualifications or skills — look for people with a transformative mindset.
Example: A company hired a candidate with no prior experience but with strong creative thinking. That person helped the company expand into new markets.


8️⃣ Bring Your Whole Self to Work

Leaders should show their true selves.
Authenticity builds trust and long-term respect.
Case Study: A school principal who shared personal life lessons with students was praised as a “leader with humanity.”


9️⃣ Find Time to Reflect

Being too busy with daily tasks can make leaders lose sight of the big picture.
Reflection and self-evaluation are essential for growth.
Modern Practice: Spending 15 minutes a day writing a “Reflection Journal.”


🔟 Recognize Leadership as Ongoing Practice

Leadership is not a destination; it’s a continuous journey.
Learning, adapting, and innovating must never stop.
Case Study: Steve Jobs constantly learned new ideas throughout his life, transforming Apple in the process.


The 10 principles of strategic leadership help a leader move beyond short-term success toward long-term transformation.

When these principles are practiced, a leader can elevate not only their organization but also their community and country.