14th Anniversary Celebration of Vivekananda Technical College மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடனான NVQ சான்றிதழ் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு தொழில்திறன்களை வழங்கி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இக்கல்லூரியானது, மூன்றாம் நிலை மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (TVEC) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சி நிறுவனமாகும்.
பின்தங்கிய மற்றும் வளம் குறைந்த சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டு, தொழில்முறை அறிவு, நடைமுறை அனுபவம் மற்றும் வேலைவாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் பல்வேறு NVQ பயிற்சி நெறிகள், திறன் மேம்பாட்டு பாடநெறிகள், மொழிப் பயிற்சிகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், தொழில்திறன் பயிற்சிகளுடன் இணைந்து வாழ்க்கைத்திறன் பயிற்சிகள் மற்றும் ஆலோசனை வழிகாட்டல்கள் வழங்குவதன் மூலம், இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை உறுதியான பாதையில் அமைத்துக்கொள்ளவும், தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் சாதனையாளர்களாக உருவெடுக்கவும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தொடர்ச்சியான சேவையை வழங்கி வருகின்றது.
இவ்வாறு சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்தும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பல சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் இவ்வாறு தசாப்தம் கடந்து தன் சேவையை நிலை நிறுத்திய கல்லூரியின் 14 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் கல்லூரியில் 04/04/2026 அன்று இடம்பெற்றது.
இதன் போது கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
14th Anniversary Celebration of Vivekananda Technical College
Vivekananda Technical College, operating in the Batticaloa District, has been providing vocational skills to youth for the past 12 years through government-recognized NVQ certification training programs. Established in 2012, the college is a registered and accredited technical and vocational training institute under the Tertiary and Vocational Education Commission.
Focusing on youth from underprivileged and resource-limited communities, the college conducts various NVQ training courses, skill development programs, language training, and career guidance activities aimed at enhancing professional knowledge, practical experience, and employability skills.
In addition to vocational training, the college also provides life skills training and counseling guidance, helping young individuals build a strong future path and develop confidence to become successful members of society. Vivekananda Technical College continues to offer its dedicated services in this regard.
Furthermore, the college actively engages in various social service initiatives, demonstrating its commitment to community welfare.
Marking over a decade of continuous service, the 14th anniversary celebration of the college was held on 04/04/2026 at the college premises.
The event was highlighted by the participation of the college staff and students.

