எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்
எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

எதிர்காலத்திற்கு ஒரு அடித்தளம்

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு செயற்பாடாக எமது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது எமது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், ஆவணி மாதத்திற்குரிய செயற்பாடானது சவுக்கடி பிரதேசத்தில் அமைந்துள்ள பனை ஓலை உற்பத்தி நிலையத்தின் 30 தொழில் முயற்சியாளர்களை மையப்படுத்தியதாக நடாத்தப்பட்டதோடு அவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வாகவும் இது அமைந்தது.

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களை தொழில் துறையில் முன்னேற்றுவதற்கான அடித்தளமாக மட்டுமன்றி பனை ஓலை உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்தல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட முறையான வழிகாட்டலுக்கும் இச்செயற்பாடு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இச்செயற்பாட்டிற்காக எமது அறக்கட்டளையினூடாக தமது அனுசரணையை வழங்கிய இலண்டனைச் சேர்ந்த திரு.சின்னத்தம்பி செந்தில்செல்வன் அவர்களுக்கு எமது அறக்கட்டளை சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

A foundation for the future

The ‘Madham Oru Kalam’ activity, implemented by our Vivekananda College of Technology as an activity for social change under the theme of empowering the youth for change, is being carried out by the college every month in coordination with our Vivekananda Community Foundation.

Based on that, the activity for the month of Avani was conducted focusing on 30 entrepreneurs of the palm leaf manufacturing plant located in the Soukkadi area and it also served as a career guidance workshop for them.

There is no doubt that by undertaking such activities for self-employed entrepreneurs, this activity will not only provide a foundation for their advancement in the industry but will also pave the way for systematic guidance including the production and marketing of palm leaf products.

On behalf of our Foundation, we would like to express our gratitude to Mr. Chinnathambi Senthilselvan from London who provided his support through our Foundation for this activity.