வினாடிக்கு 600 கோடி தொன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்
வினாடிக்கு 600 கோடி தொன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்

வினாடிக்கு 600 கோடி தொன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்

வினாடிக்கு 600 கோடி தொன் பொருட்களை விழுங்கி வளரும் புதிய கோள்

நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு புதிய கோள் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

குறித்த கோளுக்கு ‘சா 1107 - 7626’ என்று பெயர் சூட்டினர்.

வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும், ஆனால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாகக் குறித்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படி அனைத்து பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்று வட்டப் பாதையில் உள்ள 600 கோடி தொன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருவதாகக் கூறப்படுகின்றது.

விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாகப் பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதைப் பார்ப்பது இதுவே முதல் முறை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ‘சா 1107 – 7626 ‘ கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தப்புலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்த புதிய கோளின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

A New Planet Growing by Swallowing 60 Billion Tons of Material Every Second

NASA researchers and astronomers around the world continue to study planets in the universe.

In 2008, scientists discovered a new planet, which they named “Cha 1107-7626.”

Normally, a planet orbits a star, but this newly discovered planet exists independently — it does not orbit any star.

In recent months, it has been reported that this planet has been absorbing all nearby materials in its surroundings.

This behavior — swallowing everything around it — has astonished scientists.

According to research, the planet consumes about 60 billion tons of dust and gas every second from its orbital region.

Scientists say this is the first time they have observed a free-floating planet in space growing at such an extraordinary rate.

Experts believe the planet’s rapid growth is driven by magnetic fields, similar to the process that occurs during the formation of stars.

This discovery is considered a major milestone in the field of space research, and scientists continue to closely monitor the planet’s activity.