Amirda

அரச நிறுவனங்களுக்கான அமிர்தாவின் கணனிப் பயிற்சிகள்

மட்டுமாநகரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் சேவைகளுக்கு முன்னோடியாக திகழ்கினற Amirda நிறுவனத்தின் மற்றுமொரு சேவையாக மண்முனைமேற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரியும் அலுவலர்களுக்கான அடிப்படைத் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி நிகழ்வு 10.04.2025ஆம் திகதி மண்முனைமேற்கு வலயக்கல்வி அலுவலகத்தில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாக, பொது நிர்வாகத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் வேலை செயற்திறனை மேம்படுத்தும் வகையில் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவதாக அமைந்திருந்தது .

மண்முனைமேற்கு வலயக்கல்வி பணிப்பாளரின் வழிகாட்டலில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திரு க. ரகுவரன் அவர்களும், திரு. யோ. சா. சஜீவன் அவர்களும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் Amirda (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அமிர்தா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு த. புவிகரன் அமிர்தா நிறுவனத்தின் உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் வளவாளர் குழாமால் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

இந்த பயிற்சியானது முகாமைத்துவ வேலைகளுக்கு தேவையான மற்றும் அன்றாடம் தங்கள் வேலைகளுக்கு தேவையான விடயங்களை நவீன முறையில் மிக இலகுவாக தாங்கள் செய்யக்கூடியதான விடயங்களை பயிற்றுவிப்பதாக அமைந்திருந்தது.

பயிற்சிநேரம் முழுவதும் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் பெரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஒவ்வொரு அம்சத்தையும் நேரடியாக கற்றுக் கொண்டு, செயல்முறைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
பயிற்சியினை ஒருங்கிணைத்த அதிகாரிகளுக்கும் வளவாளர்களுக்கும் அனைவரும் நன்றி தெரிவித்தனர். மேலும் இந்தப் பயிற்சி மிகப் பயனுள்ளதாக இருந்தது என்றும், எதிர்காலத்தில் இதனைப்போன்ற கூடுதலான பயிற்சிகளை தாம் எதிர்பார்பதாகவும் இதனால் தாம் உச்ச பயனை அடையக்கூடியதாக அமையும் எனவும் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்


Amirda’s IT Training for Government Institutions

As a pioneer in Information Technology and Accounting services in the Batticaloa district, Amirda (Pvt) Ltd has once again demonstrated its commitment to empowering public service through its latest initiative. A foundational Information Technology training session was successfully conducted on 10.04.2025 at the Manmunai West Zonal Education Office, exclusively for officers serving in that division.

The primary aim of this training was to enhance the efficiency of officials working in the public administration sector by equipping them with essential IT knowledge and skills.

Under the guidance of the Zonal Education Director of Manmunai West, Assistant Education Directors Mr. K. Raguvaran and Mr. Y. C. Sajeevan participated in the event. The training was facilitated by a team of experts from Amirda (Pvt) Ltd, including its Director Mr. K. Pratheeswaran and the Chief Executive Officer Mr. T. Puvikaran, along with dedicated staff members of the organization.

This training focused on equipping the participants with the necessary modern tools and techniques to perform their day-to-day administrative tasks more efficiently and effortlessly.

The attending officers showed great enthusiasm throughout the session, actively participating and engaging in hands-on practical training. They extended their heartfelt thanks to the organizers and resource persons for delivering such a valuable experience.

Furthermore, the participants expressed that the training was highly beneficial and conveyed their interest in attending more such programs in the future, highlighting the significant impact and usefulness of the session.

For more visit Maatram News