அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறப்பாக கொண்டாப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தினம்
அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறப்பாக கொண்டாப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தினம்

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறப்பாக கொண்டாப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தினம்

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் சிறப்பாக கொண்டாப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தினம்

சர்வதேச சிறுவர் தினமும், உலக ஆசிரியர் தினமும் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தில் 05.10.2025 திகதி ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாப்பட்டது

இந்நிகழ்வு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் தலைவர் பொன். பேரின்பநாயகம் ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்றது

மற்றும் இந்நிலைய மாணவிகளின் கலை நிகழ்வுகள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்றதுடன் இந்நிலையத்தில் இருந்து முதல் தடவையாக பல்கலைக்கழகம் செல்லும் மாணவிகள் கௌரவிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டுகளில் க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி அடைந்த மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

மற்றும் இந்த ஆண்டு நிலையத்திற்கு மிக சிறப்பாக ஒழுங்காக வருகை தந்த பிள்ளைகளும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் கற்றலில் முன்பிருந்த நிலையினை விட தற்போது சிறந்த மாற்றத்தை பெற்ற ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவிகளில் ஒருவர் கௌரவிக்கப்பட்டார்

எமது நிலையத்தின் செயற்பாடுகளுக்கு கட்டுப்பட்டு பிள்ளைகளின் வரவு வீதத்தில் கவனம் செலுத்தி நிலையத்திற்கு பிள்ளைகளை ஒழுங்காக அனுப்பிய பெற்றார்களும் பிள்ளைகளின் கற்றலில் அக்கறை செலுத்தி சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்திய பெற்றார்களும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்

மற்றும் சிறந்த ஆசிரியர் சேவைகளை செய்து கொண்டிருக்கும் எமது அன்பான ஆசிரியர்களை கௌரவித்ததுடன் , முன்பு சாரதா நிலையத்தில் பணியாற்றி இடை விலகிய. முன்னாள் பணியாளர்களும் அவர்களது சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்.

இதன்பின் அனைத்து பிள்ளைகளுக்குமான பரிசுகள் வழங்கப்பட்டு தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், முகாமையாளர், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் கைவேலி பாடசாலை அதிபர் பெற்றோர்கள் மாணவர்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Children’s Day and Teachers’ Day Celebrated Grandly at Annai Sri Saratha Nilayam

The International Children’s Day and World Teachers’ Day were celebrated in a grand manner at Annai Sri Saratha Nilayam on Sunday, 05 October 2025.

The event was held under the chairmanship of Mr. Pon. Perinbanayagam, the Head of Annai Sri Saratha Nilayam.

The students of the institution presented various cultural performances, which were conducted in a lively and impressive manner. During the event, students who are proceeding to university for the first time from the institution were honored, along with those who had achieved success in the G.C.E. Ordinary Level examinations in previous years.

In addition, students who maintained excellent attendance throughout the year were recognized and awarded prizes. One student from each class who showed the greatest improvement in learning compared to the previous year was also specially honored.

Parents who ensured their children’s regular attendance, actively supported their education, and contributed to their academic progress were also appreciated and presented with gifts as a token of recognition.

Furthermore, dedicated teachers who have rendered outstanding service at the institution were honored, along with former staff members who had previously served at Annai Sri Saratha Nilayam—their past contributions were fondly remembered and appreciated.

The celebration concluded with the distribution of gifts to all students, followed by a tea reception, bringing the event to a joyful close.

The event was attended by administrative members, the manager, officers, teachers, the principal of Kaivelly School, parents, and students, who graced the occasion with their presence and support.