2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளன.
எனவே, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாகவே மாணவர்கள் தமது முடிவுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளையும் விரைவாக வெளியிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Announcement on G.C.E. Advanced Level Examination Results
The results of the 2025 G.C.E. Advanced Level Examination will be released before the upcoming Sinhala and Tamil New Year, Commissioner General of Examinations, Indika Kumari Liyanage, announced.
The final stages of work related to releasing the Advanced Level results are currently nearing completion.
Therefore, students will be able to receive their results before the New Year celebrations, she stated.
Meanwhile, the evaluation of answer scripts for the G.C.E. Ordinary Level Examination has already commenced.
The practical examinations for the Ordinary Level are scheduled to be held in the latter part of April.
She further mentioned that necessary steps will be taken to release the Ordinary Level results promptly after the completion of the practical examinations.

