விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் வாணி விழா
விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியில் 01.10.2025 வாணிவிழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் வாணிவிழா சிறப்பாக நடைபெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சிநெறியினை வழங்குதன் மூலம் இளைஞர்கள் தமது திறன்களை அடையாளங்கண்டு அவர்களை சமூகத்தின் மத்தியில் வெற்றியாளர்களாக மாற்றுவதில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றி வருகின்றது. அது மாத்திரமின்றி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு மேலதிக செயலமர்வுகள் நடாத்தி வருவதுடன் பல்வேறு நிகழ்வுகளையும் நடாத்தி வருகின்றது.
அதன் அடிப்படையிலேயே இன்று கல்லூரி வழகத்தில் வாணிவிழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன், கல்லூரி முதல்வர் த.சந்திரசேகரம் மற்றும் கல்லூரியின் வளவாளர்கள், போதனாசிரியர்கள், அமிர்தா நிறுவனத்தின் பணியாளர்கள், உள்ளடங்கலாக கல்லூரியின் அக்கறை கொண்ட தரப்பினர் மற்றும் பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.



மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Annual Vani Festival at Vivekananda College of Technology
The Vani Festival was celebrated at Vivekananda College of Technology on 01.10.2025.
The event was held in the college auditorium under the leadership of K. Pratheeswaran, Executive Director of the institution.
For more than 10 years, Vivekananda College of Technology has played a vital role in helping youth identify their skills and transform them into achievers in society by offering government-recognized training programs. In addition, the college has always prioritized the welfare of its students by organizing extra workshops and various other events.
As part of this commitment, the Vani Festival was celebrated on the college premises today.
The event was graced by Executive Director K. Pratheeswaran, Principal T. Chandrasekaram, college administrators, lecturers, staff members of Amirtha Institution, well-wishers, and trainees.