அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் நாளை (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு மார்ச் மாதத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இதனையடுத்து இரண்டாம் கட்டத்தின் கீழ் தகுதிபெற்ற 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
இந்த நிதியானது பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நாளை (26) நேரடியாக வரவு வைக்கப்படும் என சபை தெரிவித்துள்ளது.
தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மார்ச் 26ஆம் திகதி முதல் தத்தமது வங்கி கணக்குகளின் ஊடாக ‘அஸ்வெசும’ நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Aswesuma March Payment Announcement
The Welfare Benefits Board has announced that the March payments under the Aswesuma welfare program for senior citizens aged 70 and above will be distributed starting tomorrow (26).
Accordingly, in the first phase, 622,462 elderly beneficiaries aged over 70 will receive the March allowance.
The government has allocated 3.1 billion rupees for this purpose.
In the second phase, a total of 356 million rupees will be distributed among 71,339 eligible elderly beneficiaries.
The board further stated that these funds will be directly credited to the beneficiaries’ bank accounts tomorrow (26).
Eligible senior citizens and their family members can receive the Aswesuma benefits through their respective bank accounts starting from March 26, as mentioned in the official statement.

