Awareness Session on Non-Communicable Diseases விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வூட்டும் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 05.02.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ICT Technician NVQ Level 3 பயிலுனர்களுக்கு தொற்றா நோய்கள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத அடிப்படை வைத்தியசாலையின் சமூக மருத்துவ அலுவலர்களான Dr. S. திரவியரா, Dr. P. நிஷாந்தன் தொற்றாத நோய்கள் (NCD) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.


இந்த செயலமர்வில் Dr. S. திரவியரா, Dr. P. நிஷாந்தன் மற்றும் அவர்களது குழுவினர், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொழிற்பயிற்சி முகாமையாளர் திரு. சார்ல்ஸ் கிரேசியன், கல்லூரியின் வளவாளர்கள், பயிலுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Awareness Session on Non-Communicable Diseases
Various awareness and career guidance activities are being conducted for the students undergoing training at Vivekananda College of Technology.
In line with this, an awareness session on non-communicable diseases was held on 05.02.2026 for the ICT Technician NVQ Level 3 trainees who are currently undergoing training at Vivekananda College of Technology.
Community medical officers from the Siddha Ayurvedic Base Hospital, Puthukudiyiruppu, Batticaloa — Dr. S. Thiraviyara and Dr. P. Nishanthan — provided awareness on non-communicable diseases (NCDs) and methods of prevention.
Dr. S. Thiraviyara, Dr. P. Nishanthan and their team, along with the Industrial Training Manager of Vivekananda College of Technology, Mr. Charles Gracian, the college staff, and trainees, participated in this session.

