கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் தொழிநுட்ப உலகில் உரிய வழிகாட்டல்கள் இன்மையினால் பல இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் அபாய நிலையில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

அந்தவகையில் இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்கி அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை சமூகத்தின் மத்தியில் சாதனையாளர்களாக மாற்றுவதில் விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியானது தசாப்தம் கடந்த சேவையினையாற்றி வருகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.

கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

அதனடிப்படையில் விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியினரால் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையமாகிய ஹிமாலயா கல்வி நிலையத்தில் க.பொ.த (உ/த) பிரிவில் வணிகக்கல்வி பாடத்தினை கற்கும் மாணவர்களுக்கான கணினி அறிவு மற்றும் அவர்களுக்கான தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டமானது 15.09.2025 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

75ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில் தொழில்கல்வியின் அவசியம் பற்றியும் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடதக்கது.

கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

கணினி அறிவு மற்றும் தொழில் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Computer literacy and career awareness workshop

It is noteworthy that in today’s growing technological world, the lives of many youth are in danger of being jeopardized due to the lack of proper guidance.

In this regard, it is noteworthy that Vivekananda College of Technology has been serving for over a decade in providing proper guidance to the youth and improving their skills to make them achievers in the society.

Based on this, a computer literacy and career awareness project for students studying Commerce in the G.C.E. (A/L) section was held by Vivekananda College of Technology at Himalaya Education Institute, a private educational institution located in Kaluwanchikudi, Batticaloa on Monday, 15.09.2025.

It is noteworthy that the need for vocational education was also clarified in this awareness event, which was attended and benefited by more than 75 students.