Blood Donation Program Held at the College மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கடந்த 12 ஆண்டுகளாக அரச அங்கீகாரத்துடனான NVQ சான்றிதழ் பயிற்சிகள் மூலம் இளைஞர்களுக்கு தொழில்திறன்களை வழங்கி வருகின்றது. 2012 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இக்கல்லூரியானது, மூன்றாம் நிலை மற்றும் தொழில் பயிற்சி ஆணையம் (TVEC) இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை பயிற்சி நிறுவனமாகும்.
சமூகத்தின் நலனில் அக்கறை செலுத்தும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது பல சமூக சேவைகளையும் முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் “உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்” என்ற அடிப்படையில் 17.02.2025 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.
இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் (பொது முகாமையாளர், இராமகிருஷ்ண மிஷன், கல்லடி, மட்டக்களப்பு) அவர்கள் கலந்து கொண்டு, இராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோருக்கு பூஜைகள் செய்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் கல்லூரி பயிலுனர்கள் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் வழங்கியதுடன், இராமகிருண மிஷன் இல்ல மாணவர்களும் கல்லூரியின் பணியாளர்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கியமை சிறப்பம்சமாகும்.
இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது கல்லூரியின் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சமூக நலன்புரி அமைப்பின் சேவையாளர்கள், கல்லூரியின் சேவையளர்கள் உட்பட கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.














மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Blood Donation Program Held at the College
Vivekananda Technical College, operating in the Batticaloa District, has been providing vocational skills to youth for the past 12 years through government-recognized NVQ certificate training programs. Since 2012, the college has functioned as a registered and accredited technical and vocational training institute under the Tertiary and Vocational Education Commission (TVEC).
As an institution committed to the well-being of society, Vivekananda Technical College has been carrying out various community service initiatives. In line with this commitment, a blood donation program was held on 17.02.2025 at the college under the theme “Let us donate blood, let us save lives.”
This event, organized in commemoration of the centenary celebration of the Ramakrishna Mission, took place at the college auditorium. Srimath Swami Neelamadhavanandaji Maharaj (Manager, Ramakrishna Mission, Kallady, Batticaloa) graced the occasion and ceremonially inaugurated the event by offering pooja to Sri Ramakrishna, Holy Mother Sarada Devi, and Swami Vivekananda.
At the event, college trainees enthusiastically came forward to donate blood. Students from the Ramakrishna Mission Home, as well as the college staff, also participated in the blood donation, which was a notable highlight of the program.
The blood donation campaign was conducted under the leadership of the College Director, Mr. K. Pratheeswaran. Social service organization volunteers, college service personnel, and students also took part in the event.
