Bus Fares Can Be Paid Using Bank Cards
Bus Fares Can Be Paid Using Bank Cards

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணம் செலுத்தலாம்

வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களைச் செலுத்தும் முறை Bus Fares Can Be Paid Using Bank Cards எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்த நடவடிக்கை, மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதற்கட்டத்தின் கீழ், மூன்று மாகாணங்களுக்கான போக்குவரத்து மார்க்கம் உள்ளிட்ட சுமார் 20 போக்குவரத்து மார்க்கங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, காலி, மாத்தறை மற்றும் பதுளை நோக்கிப் பயணிக்கும் பேருந்துகளில் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பயணிகளுக்குக் கட்டணத்துக்கு மேலான மீதித்தொகையை திருப்பி வழங்குவது உட்பட்ட விடயங்களில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Bus Fares Can Be Paid Using Bank Cards

A system allowing passengers to pay bus fares using bank cards will be launched from next Monday.

This initiative is being implemented by the Ministry of Transport and Highways under the technical guidance of the Ministry of Digital Economy, and it will begin at the Makumbura Multimodal Transport Center.

In the first phase, the project will be introduced on about 20 bus routes, including routes connecting three provinces.

Accordingly, passengers traveling on buses heading towards Galle, Matara, and Badulla will be able to use this digital payment method.

This measure is expected to help passengers, especially in situations involving balance refunds and other related issues.