மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

“இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல்” என்னும் தொனிப்பொருளில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் வண்ணம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினூடாக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழான எல்லைப் பிரதேசங்களை மையப்படுத்தி அப்பிரதேசத்தின் மாணவர்களுக்கான Office Managment & IT மற்றும் ஆங்கிலப் பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மனித நேய நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் கரடியனாறு மனித நேயம் சமுதாயக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கரடியனாறு சமுதாயக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது Office management & IT மற்றும் ஆங்கிலப் பயிற்சிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு AU Lanka நிறுவனத்துடன் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.Y.C.சஜீவன், கரடியனாறு இந்து வித்தியாலய அதிபர் திரு.உதயச்சந்திரன், உன்னிச்சை 8ம் மைல் கல் பாடசாலை அதிபர் திரு.T.விநாயகமூர்த்தி, மரப்பாலம் சீயோன் சிறுவர் அபிவிருத்தி நிலைய உத்தியோகஸ்தர்கள் உள்ளடங்கலாக விவேகானந்த குடும்பத்தின் சேவையாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.Y.ஜெயச்சந்திரன் அவர்கள் பதவியுயர்வு பெற்று வடமாகாண கல்விப்பணிப்பாளராக பதவியேற்கவுள்ள நிலையில் அவர் கல்வித்துறையில் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டி விவேகானந்த குடும்பத்தினரால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

VCOT சமுதாய கல்லூரி முறையிலான குறித்த செயற்பாடுகளை தேவைப்பாடுடைய பிரதேசங்களில் முன்னெடுப்பதன் மூலம் இளைஞர்கள், யுவதிகளை அடையாளப்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் எதிர்காலத்திற்கான சிறந்த வழிகாட்டலாகவும் அமையும்.

ஆசிரியவளம் மற்றும் பௌதீக வளம் குறைந்து காணப்படும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துடன் இணைந்த இந்த சேவை தொடர்ச்சியாக மாணவர்களுக்கான வாழ்வியல் வழிகாட்டலுடன் அவர்களிற்கு தேவையான தொழில் பயிற்சிகள் மற்றும் அதற்கான இணைப்புக்களை மேற்கொள்வதுடன் தேவைக்கேற்ற அடிப்படையான பயிற்சி பட்டறைகளை தொடர்ந்து வழங்கவிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
மேலதிக புகைப்படங்களுக்கு மாற்றம் செய்திகள் முகநூல் பக்கம்

Certificate presentation event for students

Various activities are being carried out by Vivekananda Technical College to strengthen the youth under the theme of “Empowering Youth for Change”.

As a part of this, Office Management & IT and English training is being conducted for the students of the backward areas and border areas below the poverty line.

In this context, a certificate presentation event for the students studying at Karadiyanaru Humanity Community College, which is implemented by Vivekananda Technical College in collaboration with the Batticaloa Western Education Zone through the Vivekananda Community Trust under the auspices of the Humanity Trust Fund, was held at Karadiyanaru Community College.

On this occasion, certificates were awarded to students who completed Office Management & IT and English courses, and the students who won the drama competition organized in collaboration with AU Lanka on the occasion of Environment Day were also honored with certificates.

The event, which was held under the chairmanship of Mr. K. Pratheeswaran, Executive Director of Vivekananda College of Technology, was graced by the presence of Mr. Y. Jayachandran, Director of Education, Batticaloa West Zone, Mr. Y.C. Sajeevan, Deputy Director of Education, Batticaloa West Zone, Mr. Udayachandran, Principal of Karadiyanaru Hindu Vidyalaya, Mr. T. Vinayagamoorthy, Principal of Unnichai 8th Milestone School, Mr. T. Vinayagamoorthy, officials of the Marapalam Zion Child Development Center, and other servants of the Vivekananda family.

Furthermore, the Director of Education of the Batticaloa Western Zone, Mr. Y. Jayachandran, who is about to be promoted and take office as the Director of Education of the Northern Province, was honored by the Vivekananda family in appreciation of his immense service in the education sector and presented with a memento.

By implementing the activities of the VCOT community college system in needy areas, it will not only identify the youth and women but also serve as a good guide for their future.

It is worth noting that this service, which is affiliated with the Batticaloa Western Education Zone, which is facing a shortage of faculty and physical resources, will continuously provide life guidance to students, provide them with necessary vocational training and connections for the same, and will continue to provide basic training workshops as needed.

1 Comment

Comments are closed