10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

 10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

 10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் நாளை (11) முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புனரமைப்புப் பணிகள் காரணமாகக் குறித்த பேருந்து நிலையம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி புனரமைப்புப் பணிகள் முடியும் வரை, புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 10 மாதங்களுக்கு மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்

இந்தநிலையில் நீண்ட தூர பேருந்துகள் பெஸ்டியன் மாவத்தையிலிருந்து இயக்கப்படும் என்றும், ஏனைய குறுகிய தூர பேருந்துகள் போதிராஜ மாவத்தையிலிருந்து இயக்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்தப் புதுப்பித்தல் பணிகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 540 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இது ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Colombo Central Bus Station to be closed for 10 months

The Sri Lanka Transport Board (SLTB) Central Bus Stand in Colombo will be closed for the next 10 months from tomorrow (11).

The bus stand will be closed for renovation works.

Accordingly, the Sri Lanka Transport Board has stated that until the renovation works are completed, buses will operate from Purakottai, Bodhiraja Mawatha, Gunasinghapura and Bestian Mawatha.

Meanwhile, the Sri Lanka Transport Board’s Deputy General Manager, B.H.R.T. Chandrasiri, stated that long-distance buses will operate from Bestian Mawatha, while other short-distance buses will operate from Bodhiraja Mawatha.

He made this statement while speaking to the media.

It has also been reported that the renovation works will be carried out under the government’s Clean Sri Lanka program.

It has been stated that approximately 540 million rupees have been allocated for this under the Clean Sri Lanka program and it will be completed within a year.