Controlling Snails
Controlling Snails

நத்தைகளைக் கட்டுப்படுத்தல்

தற்போது நிலவும் மழைக்காலம் மற்றும் மழைக்குப் பின்னரான காலம் Controlling Snails நத்தைகளின் செயற்பாட்டுக்கு மிகவும் உகந்ததாகும்.

பழப்பயிர்கள், இலைப்பயிர்கள், பல்வேறு காய்கறிகள், கிழங்குப் பயிர்கள் மற்றும் அலங்கார செடிகள். வளர்க்கும் விவசாயிகளின் ஓர் மோசமான எதிரியாக நத்தை கருதப்படுகிறது.
நத்தைகள் பொதுவாக இரவில் சுறுசுறுப்பாக இயங்குபவை. வளமான மண்ணில், நத்தைகள் 2 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வெள்ளைநிற, ஒளிஊடுருவக்கூடிய முட்டைகளை இடுகின்றன. நத்தைகள் தங்கள் முழு உடலையும் பயன்படுத்தி சுவாசிக்கின்றன.

இவை பயிரை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், பயிர்களுக்கு பல்வேறு தொற்றுநோய்களையும் கொண்டு வருகின்றன.

நத்தைகளை கட்டுப்படுத்த, தோட்டத்தை சரியான நேரத்தில் உழுதல், புற்கள், களைகள் மற்றும் தாவர குப்பைகளை தொடர்ந்து அகற்றுதல் ஆகியவை முக்கியமானவையாகும்.
நத்தைகளுக்கான உயிரியல் கட்டுப்பாடு

🐌❌🍃

மெட்டாரைசியம் அனசோபிலியே எனும் நுண்ணுயிர், ஏக்கருக்கு 2 லீட்டர் (350 மில்லி / 16 லீட்டர் தாங்கி) தரைவழி மற்றும் செடிகளுக்கு 14 நாட்கள் இடைவெளியில் விசிறப்பட இவை அழிக்கப்படும்.


நத்தைகளைக் கட்டுப்படுத்தும் ஏனைய இயற்கை வழிகள்
🐌❌🐌❌🐌
தடுப்பு 1

நத்தைகள் ஒளியுள்ள திறந்த பகுதிகளை விரும்பாதவையாதலால், பயிர்கள் நடும்போது, பயிர் அடர்த்தி குறைவாக நடுதல், இது தோட்டத்தில் நத்தைகளுக்கு எதிரான ஆரம்பகட்ட தடுப்புநடவடிக்கை என்று கருதப்படுகிறது.

தடுப்பு 2
🐌❌
பியர் பொறி: ஒரு சிறிய, கொள்கலனின் விளிம்புகள் தரையில் படும்வகையில், சிறிது மண்ணை தோண்டிப் புதைத்து, அக்கொள்கலனை பியர் கொண்டு அதன் விளிம்புக்கு சற்று கீழே நிரப்பவும்.
பயிருக்கு தெளிக்கும் தண்ணீர் / மழைநீர், பியருடன் கலக்காதபடி, நத்தை உள்ளே செல்லக்கூடிய அளவு இடைவெளியுடனான ஒரு மேல் தடுப்பு போடுவது அவசியம்.
பியர் வாசனையால் நத்தைகள் மிகவும் ஈர்க்கப்பட்டு அதில் விழுந்து மூழ்கிவிடும்.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு கிண்ணத்தின் வடிவத்தில் நத்தைகளுக்கான சிறப்பு பியர் பொறிகளும் விற்பனைக்கு உள்ளன.
கொள்கலனில் உள்ள பியர் 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும்.

தடுப்பு 3
🐌❌
மரச்சாம்பலை, தாவரங்களைச் சுற்றித் தூவும்போது, சாம்பல் அவற்றின் ஈரமான உடலில் ஒட்டிக்கொண்டு அவை நகர்வதை கடினமாக்குகிறது. இந்த முறையின் செயல்திறனை மேம்படுத்த, சாம்பலில் சுண்ணாம்பு அல்லது உலர் புகையிலைத்தூள் (1:1 விகிதம்) சேர்க்கலாம். வாரம் ஒருமுறை இதனை செய்ய வேண்டும்.

தடுப்பு 4
🐌❌
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் விவசாயிகள் நத்தைகளுக்கு எதிராக கடுகு பயன்படுத்துகின்றனர் என அறியமுடிகிறது. உலர்ந்த கடுகுத் தூள் தாவரங்களுக்கு இடையில் ஒவ்வொரு வார இடைவெளியில் தூவப்படுகிறது.

தடுப்பு 5
🐌❌
உப்புத் தூவுதல் எளிமையான ஓர் வழிமுறையாயினும், இச் செயற்பாடு மண்ணின் உவர்த்தன்மைக்கு வழிவகுக்கிறது. மேலும் உப்புச்செறிவானது தாவரங்களையும் மண்ணில் நுண்ணுயிர் பெருக்கத்தையும் பாதிக்கும்.

தடுப்பு 6
🐌❌
கையால் நத்தைகளை சேகரித்து அகற்றுவதும் ஓர் வினைத்திறனுள்ள முறையாகும். இவற்றை அதிகாலையிலோ, மாலையிலோ அல்லது மழைக்குப் பின்னரோ சேகரிக்கலாம்.
ஆனால் இதற்கு நிறைய நேரம் எடுக்கும்.

தடுப்பு 7
🐌❌
தோட்டத்தில் நத்தைகளின் நகர்வுகளுக்குத் தடைகளை கீழ்வருமாறு செய்யலாம். தோட்டப் பாதைகளை சரளைக்கற்களால் தூவி, ஓரங்களில் முட்டை ஓடுகள் அல்லது சிறு முட்கள் தூவிவிடலாம். இது நத்தைகளின் நடமாட்டத்தை சிக்கலாக்கும்.

தடுப்பு 8
🐌❌🦆
வாத்துகள், கோழிகள், செண்பகம் மற்றும் தவளைகளாலும் அதிக அளவில் நத்தைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

CSJ Agri
076 225 0017 076 225 0017

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Controlling Snails

The current rainy season and the period immediately after it are highly favorable for snail activity.

Snails are considered a major pest by farmers cultivating fruit crops, leafy vegetables, various other vegetables, tuber crops, and ornamental plants.

Snails are usually active at night. In fertile soil, they lay white, translucent eggs about 2 millimeters in diameter. Snails breathe through their entire body.

They not only damage crops but also spread several infectious plant diseases.

To control snails, it is important to till the soil at the right time and regularly remove weeds, grasses, and plant debris.


Biological Control of Snails 🐌❌🍃

A microorganism called Metarhizium anisopliae can be used for biological control.
Apply 2 liters per acre (350 ml per 16-liter tank) to the soil and plants at 14-day intervals to effectively destroy the snails.


Other Natural Methods for Controlling Snails 🐌❌🐌❌🐌

Barrier 1

Snails avoid open, well-lit areas. Therefore, when planting crops, reduce plant density to allow more sunlight into the garden.
This serves as an initial preventive measure against snails.


Barrier 2 – Beer Trap 🐌❌

A small container can be buried in the ground so that its rim is level with the soil.
Fill it slightly below the rim with beer.
To prevent rainwater from diluting the beer, cover the trap loosely, leaving enough space for snails to enter.
Attracted by the smell, snails will crawl in and drown.
In some European countries, special beer traps with lids are sold for this purpose.
The beer in the container should be replaced every three days.


Barrier 3 – Wood Ash 🐌❌

Sprinkling wood ash around plants helps because the ash sticks to the snail’s moist body, making it difficult for them to move.
For better effectiveness, mix the ash with lime or dry tobacco dust (1:1 ratio).
Repeat this method once a week.


Barrier 4 – Mustard Powder 🐌❌

Farmers in India, Pakistan, and Bangladesh reportedly use mustard powder to repel snails.
Dry mustard powder is sprinkled between plants once a week.


Barrier 5 – Salt 🐌❌

Although sprinkling salt is a simple method, it increases soil salinity, which can harm plants and affect beneficial soil microorganisms.


Barrier 6 – Manual Collection 🐌❌

Hand-picking snails is also an effective technique.
They can be collected early in the morning, in the evening, or after rain.
However, this method requires a lot of time and effort.


Barrier 7 – Physical Barriers 🐌❌

To restrict snail movement in the garden:

  • Sprinkle gravel or sand along garden paths.
  • Scatter crushed eggshells or small thorns around plant beds.
    These create a rough surface that snails find difficult to cross.

Barrier 8 – Natural Predators 🐌❌🦆

Ducks, chickens, centipedes, and frogs are natural predators that can effectively control snail populations.


📞 CSJ Agri
📱 076 225 0017 / 076 225 0017