Discussion

தொழிற்கல்வி மேம்பாட்டிற்கான கலந்துரையாடல்

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது தசாப்தம் கடந்து பல ஆயிரம் இளைஞர்களின் திறனை வளர்த்து அவர்களின் வாழ்வில் பாரியதொரு மாற்றத்தினை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில் வளர்ந்து வரும் தொழிநுட்ப உலகில் அதற்கேற்றாற் போல் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியில் பயிலும் பயிலுனர்களிற்கு தரமான தொழில்கல்வியினை வழங்கும் நோக்கில் கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் போதனாசிரியர்களுடனான கலந்துரையாடல் 15.03.2025 அமிர்தா நிறுவனத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கல்லூரிகளில் சேவையாற்றும் முழு நேர மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள் கலந்து கொண்டதோடு தங்களது கற்பித்தல் முறைகள் பற்றி விளக்கமளித்தனர்.

கல்லூரிக்கு வருகைதரும் பயிலுனர்களில் அடிப்படை கணினி பயிற்சிக்கு இணைந்துகொள்பவர்களில் 75% மேற்பட்டவர்கள் கணினி பற்றிய எந்தவித அடிப்படையான அறிவோ அனுபவமோ அற்றவர்களாக காணப்படுவதாக தெரிவித்தனர். எனவே தொழில்நுட்ப யுகம், கணினி புரட்சி, செயற்கைநுண்ணறிவு என்று என்னதான் நாம் பல விடயங்களை பேசினாலும், ஒரு கணினியினை இயக்கும் அனுபவம் இல்லாதவர்களின் வீதம் அதிகம் என்பதோடு, அவ்வாறானவர்களிற்கே கல்லூரியின் போதனாசிரியர்கள் தமது சேவையினை வழங்குகின்றனர் என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இது தவிர தொழிலினை மையப்படுத்தி மேற்கொள்ளும் பயிற்சிகளில் இணைந்துகொள்பவர்களில் 50% பயிலுனர்களே தொழிலில் இணைந்துகொள்வதாகவும், ஏனையோர் தொழில் ஒன்றினை பெற்றிடவோ அல்லது தொழில் அனுபவத்தினை பெற்றிடவோ ஆர்வமில்லாத மனநிலையில் காணப்படுவதாகவும், இன்னும் சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலைகளோ, சிந்தனைகளோ இல்லாது காணப்படுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு பல்வேறு விதங்களில் உள்ள இந்த இளைஞர்களுக்கு தரமான திறன் பயிற்சியளித்து அவர்களை எவ்வாறு முன்னேற்றலாம் என பணிப்பாளரினால் கற்பித்தல் முறைகள் பற்றிய ஆக்கபூர்வமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதோடு, பயிற்றுவிப்பாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

அதுமட்டுமல்லாது பயிலுனர்களுக்கு தொழிற்கல்வியை வழங்குவதோடு மட்டும் நிறுத்திவிடாது அவர்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி அம் மாற்றத்தின் மூலம் சமூகத்தில் சிறந்ததொரு நபராக தொழிலை பெற்றுக்கொள்ளக்கூடியவராக அவர்கள் மாறுவதன் மூலமே அவர்களின் குடும்பத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் அந்த மாற்றமே எமது கல்லூரியின் தூரநோக்கான சமூகப்பொருளாதார மாற்றமாகும் என்பதனை அடிப்படையாக கொண்டே அனைத்து சேவையாளர்களும் கல்லூரியுடன் இணைந்து பயணிப்பதாக குறிப்பிட்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Empowering Futures:Discussion on the Advancement of Vocational Education

The discussion on vocational education at Vivekananda College of Technology highlighted the institution’s commitment to shaping the skills of thousands of young individuals for over a decade, bringing about a significant transformation in their lives. In alignment with the ever-evolving technological world, the college aims to provide high-quality vocational education to its students.

As part of this initiative, a discussion on the advancement of vocational education was held on March 15, 2025, at the Amirda private limited , under the leadership of the college’s Executive Director, Mr. K. Pratheeswaran. The discussion involved faculty members, including full-time and part-time lecturers from the Puthukudiyiruppu and Kommathurai campuses. They shared their insights into their teaching methodologies and the challenges they face in educating students.

Key Observations from the Discussion

  • Lack of Basic Computer Knowledge:
    More than 75% of the students enrolling in basic computer training courses lack prior knowledge or experience with computers. Despite the growing emphasis on technology, artificial intelligence, and digital transformation, many students have never operated a computer before. This poses a significant challenge to the faculty members, who must start from the very basics to ensure students acquire essential digital literacy.
  • Employment and Career Aspirations:
    Among those enrolled in skill-based training programs, only around 50 trainees successfully transition into employment. The remaining students either lack interest in securing a job, fail to gain practical industry experience, or struggle with career planning. Some trainees show a lack of motivation or future aspirations, making it challenging to guide them toward meaningful career paths.

Addressing Challenges & Proposed Solutions

To tackle these concerns, Executive Director Mr. K. Pratheeswaran presented innovative teaching strategies aimed at improving student engagement and skill development. The discussion also focused on:

  1. Bridging the Digital Divide:
    • Offering intensive foundational training on computer literacy before students engage in advanced skill-based programs.
    • Encouraging practical, hands-on learning to ensure students gain confidence in using technology.
    • Organizing workshops on emerging technologies like Artificial Intelligence, Cloud Computing, and Digital Marketing.
  2. Enhancing Career Readiness & Employment Opportunities:
    • Introducing career guidance programs to help students identify their skills and aspirations.
    • Facilitating internships and industry exposure to provide real-world experience.
    • Collaborating with local businesses and industries to create employment pathways for graduates.
    • Conducting soft skills training to improve communication, teamwork, and problem-solving abilities.
  3. Fostering a Mindset Shift Among Students:
    • Encouraging self-motivation and goal-setting to help students envision a better future.
    • Addressing students’ personal and psychological challenges that may hinder their career development.
    • Creating a mentorship system where experienced professionals guide students in their career journeys.

Long-Term Vision: Socio-Economic Transformation

Beyond simply providing vocational education, the discussion emphasized the need for a holistic transformation in students’ mindset and approach to life. It was agreed that true progress comes not only from gaining technical skills but also from cultivating self-discipline, perseverance, and a strong work ethic.

By ensuring that students secure meaningful employment and become responsible contributors to society, the institution aims to bring about lasting socio-economic change. Faculty members and training staff reaffirmed their commitment to working hand in hand with the college’s mission to empower youth and uplift communities through education and skill development.

The discussion concluded with a shared commitment to implement these strategies effectively and create a future where every student can excel in their career and contribute positively to their families and society at large.

For more information visit us Maatram News

Join our whatsapp community Maatram News