Discussion Programme for University Students
Discussion Programme for University Students

பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்துரையாடல்

Discussion Programme for University Students பின்தள்ளப்பட்ட நிலையில் உள்ள மற்றும் தேவையுடைய மாணவர்களை ஆதரிக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் தனிநபர் மாற்றத்திற்குமான வலுவூட்டலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 7 மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டு மனித நேயம் டிரஸ்ட் (Manitha Neyam Trust) உதவியுடன் மாதாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்தின் இரண்டாவது கட்டமாக புதிதாக உள்வாங்கப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு 10.02.2026 அன்று Vivekananda College of Technology வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த ‘டித்வா’ புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிலையத்தில் பயிலும் மலையகத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் முதற்கட்டமாக தெரிவுசெய்யப்பட்டதோடு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி மற்றும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளை இணைந்து முன்னெடுத்து வரும் மலையக மக்களின் மறுவாழ்விற்கான செயற்பாடுகளின் தொடர்ச்சியாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளமை சிறப்பானதாகும்.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் திட்டத்தின் நோக்கம், செயல்முறை மற்றும் எதிர்கால விரிவாக்கம் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும் எதிர்வரும் காலங்களில் கூடுதல் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Discussion Programme for University Students

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Discussion Programme for University Students

Vivekananda Community Foundation, which operates with the objective of supporting underprivileged and needy students, has been continuously implementing a monthly incentive allowance programme for university students.

As part of strengthening students’ educational progress and personal development, seven students have been selected under this programme over the past two years, with monthly incentives provided through the support of Manitha Neyam Trust.

As the second phase of this initiative, a discussion programme with the newly enrolled students was held on 10.02.2026 at the Vivekananda College of Technology premises.

In the first stage, ten students from the hill country who are studying at the Swami Vipulananda Institute of Aesthetic Studies and were affected by the recent ‘Tithwa’ cyclone and floods were selected. This initiative is being carried forward as part of the ongoing rehabilitation efforts for hill country communities jointly undertaken by Vivekananda College of Technology and the Vivekananda Community Foundation.

The discussion session was conducted under the leadership of the Executive Director of Vivekananda College of Technology, during which detailed explanations were provided regarding the objectives, implementation process, and future expansion of the programme.

It was also stated that more students will be enrolled under this programme in the future.