Distribution of School Bags for Grade 1 Students சமூக மாற்றத்திற்கான செயற்பாடுகளூடாக தேவைப்பாடுடைய பிரதேசங்களை மையப்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையானது வருடாந்தம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை அவர்களின் கோரிக்கைக்கமைவாக வழங்கி வருகின்றது.
அந்த வகையில், மட்/ஆரையம்பதி/ செல்வாநகர் சிவா வித்தியாலயத்தின் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க தரம் 1 இற்குப் புதிதாக வருகை தரும் 19 மாணவர்களுக்கான புத்தகப்பைகள் 29.01.2025 அன்று வழங்கிவைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் அதிபர் திரு.த.சந்திரசேகரம் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.




மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Distribution of School Bags for Grade 1 Students
The Vivekananda Community Trust, which carries out its activities focusing on underprivileged areas through initiatives aimed at social transformation, annually provides learning materials to students based on their needs and requests.
Accordingly, at the request of the Principal of Mat/Arayampathy/Selvanagar Siva Vidyalayam, school bags were distributed on 29.01.2025 to 19 students who were newly admitted to Grade 1.
It is noteworthy that the Principal of Vivekananda College of Technology, Mr. T. Chandrasekaram, also participated in and graced the event.
