Donors Visit Vivekananda College of Technology
Donors Visit Vivekananda College of Technology

விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு நிதியுதவியாளர்கள் விஜயம்

Donors Visit Vivekananda College of Technology பின்தங்கிய மாணவர்களுக்கு அடிப்படை கணினி மற்றும் தொழில்துறை திறன்களை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு திரு. க. பிரதீஸ்வரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தொழில்நுட்பப் பாடநெறிகள், கணினி சார்ந்த பயிற்சிகள், மொழித் திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

அது மாத்திரமின்றி, மாணவர்களை வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாது, வேலை வழங்குபவர்களாகவும் மாற்றுவதிலும், மேலும் அவர்களுடைய தன்னம்பிக்கையை வலுப்படுத்தி, எதிர்காலத்தில் கல்வியின் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தக் கல்லூரி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Vivekananda Community Foundation (VCF) பல்வேறு மனிதநேய மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பின்தங்கிய மற்றும் தேவையுடைய சமூகங்களை மையப்படுத்தி, கல்வி உதவி, இளைஞர் திறன் மேம்பாடு, பெண்கள் வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற திட்டங்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமானதாக மாற்றுவதற்கான ஒரு உறுதியான அடித்தளமாக விளங்கும் விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது Vivekananda Community Foundation (VCF) உடன் இணைந்து பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு நிதி உதவியை, புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் தமிழ்பேசும் உறவுகளின் நிதி அனுசரணை மற்றும் ஏனைய உதவிகளுடன் நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், 13.02.2026 அன்று, 2020 ஆம் ஆண்டிலிருந்து நிதி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் கனடா நாட்டில் வசிக்கும் திரு. இளையதம்பி ஏகாம்பரம் அவர்களும், திருமதி விஜி ஏகாம்பரம் அவர்களும், திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரம், திரு. சின்னையா ரட்ணவடிவேல் ஆகியோரும் விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு வருகை தந்து, அவர்களுடைய நிதி அனுசரணையின் கீழ் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும், கல்வி கற்று தற்போது பயனடைந்தவர்களையும் சந்தித்ததுடன், கல்லூரி மாணவர்களையும் சந்தித்தனர்.

இந்நிகழ்வின் போது, கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விவேகாநந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. க. பிரதீஸ்வரன், கல்லூரி முதல்வர் திரு. த. சந்திரசேகரம், Mr. Elaiyathamby Ehamparam, Mrs. Viji Ehamparam, Mr. Veluppillai Sivasundaram, Mr. Chinniah Ratnavadivel, Mr. Stephan Richards, Mrs. Veena Richards ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்கள் நேரடியாக எமது செயற்பாடுகளை பார்வையிட்டதுடன், எதிர்காலத்தில் எவ்வாறு இணைந்து செயற்படலாம் எனவும், கல்லூரியின் செயற்பாடுகளுக்கான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Donors Visit Vivekananda College of Technology

Vivekananda College of Technology, which was initiated in 2012 by Mr. K. Pratheeswaran with the aim of providing basic computer and industrial skills to underprivileged students, has been conducting technical courses, computer-based training programs, language proficiency classes, and career guidance activities.

In addition, the college continues to function with the objective of not only transforming students into job seekers but also into job providers. It focuses on strengthening their self-confidence and empowering them to create positive social change through education in the future.

Furthermore, Vivekananda Community Foundation (VCF), which operates with the mission of promoting social development, has been implementing various humanitarian and education-related initiatives. The organization carries out programs focused on educational assistance, youth skill development, women empowerment, and livelihood improvement, particularly targeting underprivileged and marginalized communities.

Serving as a strong foundation for building a prosperous future for youth, Vivekananda College of Technology has been carrying out various activities in collaboration with Vivekananda Community Foundation (VCF).

These ongoing initiatives have been supported for many years through financial sponsorship and other assistance from Tamil-speaking donors living abroad.

In this regard, on 13.02.2026, Mr. Elaiyathamby Ehamparam and Mrs. Viji Ehamparam from Canada, who have been providing financial sponsorship since 2020, along with Mr. Veluppillai Sivasundaram and Mr. Chinniah Ratnavadivel, visited Vivekananda College of Technology. During their visit, they met students who are currently studying under their sponsorship as well as those who have successfully completed their education and benefited from the support. They also interacted with the college students.

During the event, the guests were honored under the leadership of the Executive Director, Mr. K. Pratheeswaran, and mementos were presented to them.

The event was attended by Mr. K. Pratheeswaran, Executive Director of Vivekananda College of Technology; Mr. T. Chandrasekaram, Principal of the College; Mr. Elaiyathamby Ehamparam; Mrs. Viji Ehamparam; Mr. Veluppillai Sivasundaram; Mr. Chinniah Ratnavadivel; Mr. Stephan Richards; and Mrs. Veena Richards.

The visitors directly observed the institution’s activities and expressed their willingness to continue supporting the college and to explore future collaborative efforts.