Drug Awareness Workshop விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வூட்டும் மற்றும் தொழில் வழிகாட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 03.02.2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் ICT Technician NVQ Level 3 பயிலுனர்களுக்கு போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.


மட்டக்களப்பு ஆரயம்பதி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் போதைப்பொருள் முற்தடுப்பு தொடர்பாகவும், இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்வை பாதிக்கும் விடயங்கள் தொடர்பாகவும், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் சேவைகள் தொடர்பாக திரு. சண்முகநாதன் கணேசதாஸ் Development Officer – Drug Prevention (NDDLB, DS/MP) அவர்களாலும், சகவாழ்வு, தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம், கலை, கலாசாரம் தொடர்பாக திருமதி. நவமணி சிவலிங்கம் தேசிய ஒருமைப்பாடு உத்தியோகஸ்தர் அவர்களாலும் பயிலுனர்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.


இந்த செயலமர்வில் திரு. சண்முகநாதன் கணேசதாஸ் Development Officer – Drug Prevention (NDDLB, DS/MP), திருமதி. நவமணி சிவலிங்கம் தேசிய ஒருமைப்பாடு உத்தியோகஸ்தர், திருமதி. தில்லைநாயகி தேவராஜ் Development Officer, Arayampathy, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் செயற்றிட்ட முகாமையாளர் திருமதி. ஹ. கிந்துஜா, கல்லூரியின் வளவாளர்கள், பயிலுனர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Drug Awareness Workshop
Various awareness and career guidance programs are regularly conducted for students undergoing training at Vivekananda College of Technology.
In this regard, a drug awareness workshop was held on 03.02.2026 for ICT Technician NVQ Level 3 trainees who are currently undergoing training at Vivekananda College of Technology.
Organized by the Batticaloa Arayampathy Divisional Secretariat, the program focused on drug prevention, issues affecting the future and well-being of youth, and the services of the National Dangerous Drugs Control Board. Awareness was provided to the trainees by Mr. Shanmuganathan Ganesadas, Development Officer – Drug Prevention (NDDLB, DS/MP), and Mrs. Navamani Sivalingam, National Integration Officer, who addressed topics related to coexistence, national unity, reconciliation, arts, and culture.
Participants of the workshop included Mr. Shanmuganathan Ganesadas, Development Officer – Drug Prevention (NDDLB, DS/MP); Mrs. Navamani Sivalingam, National Integration Officer; Mrs. Thillainayaki Devaraj, Development Officer, Arayampathy; Mrs. H. Kindhuja, Project Manager of Vivekananda College of Technology; college instructors; and trainees.
