ரஸ்யாவில் நில அதிர்வு: ஆழிப்பேரலை எச்சரிக்கை
ரஸ்யாவில் இன்று அதிகாலை மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
7.08 ஆக மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.
கம்சட்கா பகுதியில் கடலுக்கு அடியில் 128 சுமார் கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வால் அந்தப் பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. அத்துடன் ஆழிப்பேரலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ரஸ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இதன்படி கடந்த 5ஆம் திகதியன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில அதிர்வை அடுத்தும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Earthquake in Russia: Tsunami warning issued
A powerful earthquake struck Russia early this morning.
The earthquake was recorded at a magnitude of 7.08.
The USGS reported that the earthquake occurred at a depth of about 128 kilometers under the sea in the Kamchatka region.
This earthquake shook buildings in the area. A tsunami warning has also been issued.
Earthquakes have been occurring continuously in the Kamchatka region of Russia for the past few months.
Accordingly, a tsunami warning was issued after the powerful earthquake that occurred on the 5th.