இளைஞர்களுக்கான சரியான வழிகாட்டல்களை வழங்கி, அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களை சமூகத்தின் மத்தியில் சாதனையாளர்களாக மாற்றுவதில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி தசாப்தத்தை கடந்த சேவையினை ஆற்றி வருகின்றது.
அந்த வகையில், பாடசாலை சமூகங்களுடன் ஒருங்கிணைந்து மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக பல செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி, மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயம், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம், மட் / ககு / செங்கலடி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் 2025 க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வாழ்த்து நிகழ்வை 2025.10.29 அன்று நடத்தியது.
இந்த நிகழ்வில், மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக கல்லூரியின் முதல்வர் திரு. T. சந்திரசேகரம் அவர்களும், பயிற்சி அதிகாரி திரு. S. பிரணவன் அவர்களும் கலந்து கொண்டனர். அதேபோல், வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மட் / ககு / செங்கலடி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக விவேகானந்த சமூக அறக்கட்டளையின் மேலாளர் திரு. S. கப்ரியல் மற்றும் கல்லூரியின் கொம்மாதுறை கிளை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை வாழ்த்தி, பேனாக்களை வழங்கி வைத்தனர்.
மேலும், குறித்த பாடசாலைகளுடன் கடந்த காலங்களில் விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து செயலமர்வுகள் மற்றும் ஏனைய கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Event to Congratulate Students Appearing for the Advanced Level Examination
Vivekananda Technical College has been rendering dedicated service for over a decade by providing proper guidance to youth, enhancing their skills, and transforming them into achievers within society.
In line with this, the college, which has been continuously carrying out various activities in collaboration with school communities to improve students’ education, organized a felicitation event for students appearing for the 2025 G.C.E. (A/L) Examination on 29.10.2025. The event was held at Kaluthavalai Maha Vidyalayam (Mad/Bad), Vantharumoolai Central Maha Vidyalayam, and Mad/Kagu/Sengaladi Central College.
At the event held at Kaluthavalai Maha Vidyalayam, Mr. T. Chandrasekaram, Principal of Vivekananda Technical College, and Mr. S. Pranavan, Training Officer, participated on behalf of the college.
Similarly, at Vantharumoolai Central Maha Vidyalayam and Mad/Kagu/Sengaladi Central College, Mr. S. Gabriel, Manager of the Vivekananda Community Foundation, along with officers from the Kommathurai branch of Vivekananda Technical College, participated, congratulated the students appearing for the examination, and distributed pens as tokens of encouragement.
Furthermore, it is noteworthy that Vivekananda Technical College has previously conducted seminars and various educational programs in collaboration with these schools over the past years.
 
				
 
 