பரீட்சை வழிகாட்டுதல் செயலமர்வு
வாழைச்சேனை கருவங்கேணி பிரதேசத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டுதல் செயலமர்வு கடந்த சனிக்கிழமை (02.08.2025) இடம்பெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகரும் வைத்தியருமாகிய திரு.சுந்தரேசன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.
“பரீட்சையில் சித்தியடைவதற்கான நுட்ப முறைகள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கணித மற்றும் விஞ்ஞான துறையில் கல்வி பயிலும் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களுக்குரிய பரீட்சை வழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட்டது.





மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Examination Guidance Workshop
An examination guidance workshop for A-level students studying in the Mathematics and Science stream was held in the Karuvankerni area of Vazhaychenai last Saturday (02.08.2025).
Mr. Sundaresan, Medical Consultant and Doctor of the Batticaloa Teaching Hospital, participated in this workshop as a resource person.
The workshop, titled “Techniques for Passing the Examination”, was attended by more than 70 students studying in the Mathematics and Science stream and examination guidance was provided to them.