சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து அணி வீரர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து அணி வீரர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பிரபல இங்கிலாந்து அணி வீரர் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இங்கிலாந்து அணியின் பிரபல சகலதுறை வீரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், அவரது 15 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்படாத நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கிறிஸ் வோக்ஸ் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

36 வயதாகும் கிறிஸ் வோக்ஸ் இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2034 ரன்களையும், 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 122 ஒருநாள் போட்டிகள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடி அவர் 204 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 1524 ரன்களும், டி20 போட்டிகளில் 147 ரன்களும் எடுத்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Famous England All-Rounder Retires from International Cricket

England’s renowned all-rounder Chris Woakes has announced his retirement from international cricket, bringing an end to his 15-year cricketing journey.

Woakes, aged 36, was not included in England’s squad for the Ashes series against Australia, after which he decided to retire from the international arena.

During his career, he represented England in 62 Test matches, scoring 2,034 runs and taking 192 wickets. He also played 122 One Day Internationals (ODIs) and 33 T20 Internationals, claiming 204 wickets in total. In ODIs, he scored 1,524 runs, while in T20Is he contributed 147 runs.