Field Visit by Donors of Vivekananda Community Foundation
சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் விவேகானந்த சமுதாய அறக்கட்ளை (VCF) பல்வேறு மனிதநேய மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பின்தங்கிய மற்றும் தேவையுடைய சமூகங்களை மையப்படுத்தி, கல்வி உதவி, இளைஞர் திறன் மேம்பாடு, பெண்கள் வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற திட்டங்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் விவேகானந்த சமுதாய அறக்கட்ளைக்கு நிதி உதவி வழங்கும் புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ரகு பத்மநாதன் அவர்கள் உள்ளிட்ட குழுவினர் 22/03/2026 அன்று விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரிக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இவர்கள் விவேகானந்த சமுதாய அறக்கட்டளையினூடாக நிதி அனுசரணை வழங்கி வரும் நிலையில் ஜீவானந்தா சிறுவர் இல்லத்திற்கு நேரில் வருகைதந்து பார்வையிட்டதுடன் அன்றைய தினம் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
கல்லூரியின் பணிப்பாளர் கந்தப்பிள்ளை பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் இதன்போது கல்லூரியின் நிகழ்ச்சித் முகாமையாளர் திருமதி.ஹ.கிந்துஜா அவர்களும் கல்லூரியின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.





மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Field Visit by Donors of Vivekananda Community Foundation
The Vivekananda Community Foundation (VCF), which operates with the objective of social advancement, continues to implement various humanitarian and education-oriented projects. Focusing on underprivileged and vulnerable communities, the organization carries out initiatives related to educational assistance, youth skill development, women empowerment, and livelihood improvement programs.
In this regard, a group of donors led by Mr. Raghu Padmanathan, who resides overseas and provides financial assistance to the Vivekananda Community Foundation, paid a field visit to the Vivekananda Technical College on 22/03/2026.
As ongoing sponsors of the Foundation, the visiting group also made a direct visit to Jeevanantha Children’s Home. During their visit, they observed the activities of the home and distributed learning materials to the children residing there.
The guests were warmly welcomed under the leadership of the College Director, Mr. Kandappillai Pratheeswaran. The College Program Manager, Mrs. H. Hindhuja, along with the college staff, were also present at the occasion.

