Final Assessment for ICTT Level 03 Trainees பின்தங்கிய மாணவர்களுக்கு அடிப்படை கணினி மற்றும் தொழில்துறை திறன்களை வழங்குவதற்காக 2012 ஆம் ஆண்டு முதல் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியானது தொழில்நுட்பப் பாடநெறிகள், கணினி சார்ந்த பயிற்சிகள், மொழித் திறன் மேம்பாட்டு வகுப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
பயிலுனர்களுக்கு தொழில்கல்வியுடன் இணைந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் இக்கல்லூரி, தேசிய தொழில்சார் தகைமை (NVQ) சான்றிதழ் பெறுவதற்கான களமாகவும் விளங்கி வருகிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு கொம்மாதுறையில் அமைந்துள்ள விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் கிளையில் ICTT Level 03 – Batch 10 பயிற்சி பயிலுனர்களுக்கான இறுதி மதிப்பீடு கடந்த 21.02.2026 சனிக்கிழமை நடைபெற்றது.
இறுதி மதிப்பீட்டிற்காக மதிப்பீட்டாளர்களாக திரு M.M.M. Sukry மற்றும் திரு U.R. Rangith ஆகியோர் கலந்துகொண்டு பயிலுனர்களின் திறன்களை பரிசோதித்தனர்.
இந்தப் பயிற்சித் தொகுதியில் பயின்ற 07 பயிலுனர்களும் NVQ Level 03 தேர்வில் சித்தி பெற்று 100% சித்தி விகிதத்தைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Final Assessment for ICTT Level 03 Trainees
Since 2012, Vivekananda Technical College has been conducting technical courses, computer training programs, language skill development classes, and career guidance initiatives with the aim of providing basic computer and industrial skills to underprivileged students.
The college operates with the objective of creating employment opportunities alongside vocational education for its trainees and also serves as a recognized center for obtaining the National Vocational Qualification (NVQ) certificate.
Accordingly, the final assessment for the ICTT Level 03 – Batch 10 trainees was held on Saturday, 21.02.2026, at the Vivekananda Technical College branch located in Kommathurai, Batticaloa.
Mr. M.M.M. Sukry and Mr. U.R. Rangith participated as assessors and evaluated the competencies of the trainees.
It is noteworthy that all 07 trainees who followed this training program successfully passed the NVQ Level 03 examination, achieving a 100% pass rate.
